பெரியார், அண்ணாவுடன் மகிந்த ராஜபக்ஸவை இணைத்து நாம் தமிழர் ஆவணப்படம்!

வி. சபேசன்

வி.சபேசன்
வி.சபேசன்

‘பெரியாரை கேவலமாக பேசுகிறீர்கள்’ என்று அருணன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் சீமானை குற்றம் சாட்டிய பொழுது, சீமானுக்கு கோபம் வந்தது. அல்லது கோபம் வந்தது போல் காட்டிக் கொண்டார்.

‘ஒரு வார்த்தை பெரியாரை தவறாக பேசியிருக்கிறேனா?’ என்று ஆவேசமாக சீமான் திருப்பிக் கேட்டார். அருணன் தொடர்ந்து அதே குற்றச்சாட்டை வைத்த போது, சீமான் மேலும் ஆவேசப்பட்டு ‘ஏ’ என்று அதட்டி ‘சும்மா லூசு மாதிரி பேசிக்கிட்டிருக்காதையா’ என்று அலறினார்.

இன்றைக்கு அவருடைய கட்சியை சேர்ந்த மிகப் பெரும் லூசுகள் ‘கண்டி நாயக்கர்’ என்கின்ற ஆவணப்படத்தை வெளியிடுகின்றார்கள்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா இவர்களோடு மகிந்த ராஜபக்ஸவின் படத்தையும் இணைத்து, குறித்த ஆவணப்படத்திற்கான விளம்பரத்தை இந்த லூசுக் கூட்டம் செய்து வருகிறது. இதை விட தந்தை பெரியாரை யாரும் கேவலப்படுத்த முடியாது.

தமிழினம் விடுதலை பெற்று சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்று வாழ்நாள் முழுவது உழைத்த தந்தை பெரியாரையும் தமிழர்களை படுகொலை செய்த மகிந்த ராஜபக்ஸவையும் ஓரே கூடைக்குள் போடுபவன் லூசு மட்டும் அல்ல. வக்கிரம் பிடித்த மிருகம்.

இனியும் ‘சீமான் நல்லவர், அவர் தந்தை பெரியாரை எதிர்த்து ஒரு வார்த்தை பேசியது இல்லை’ என்று நம்பிக் கொண்டிருக்கும் பெரியாரிஸ்டுகள் யாராவது இருந்தால், இத்தோடு அந்த எண்ணத்தை விட்டு விடுங்கள்.

இந்த ஆவணப்படத்தின் நோக்கம் சிங்களவர்களை நாயக்கர் வம்சாவழி என்று காட்டி, அவர்களையும் தெலுங்கர்கள் என்று நிறுவுவதுதான். அப்படியே தமிழர்களுக்கு ஏற்பட்ட எல்லா அழிவுகளுக்கும் தெலுங்கர்களே காரணம் என்று ஒரு வினோதமான முடிவை வெளியிட்டு, தமிழர்களை முட்டாள்கள் ஆக்குவதுதான்.

உலகம் முழுவதும் உள்ள அடிப்படைவாதிகளுக்குள் உள்ள ஒற்றுமை என்னவென்றால், அவர்கள் வரலாற்றை தமது நலனுக்கு ஏற்றபடி பேசுவார்கள். உண்மையான வரலாறுக்கும், அதற்கும் சம்பந்தம் இருக்காது. இந்தப் பண்பு கிட்லரில் இருந்து, மோடி, சீமான் என்று தொடர்கிறது.

தலைவர் பிரபாகரனை ஒரு மலையாளி என்று சொல்பவர்களும் சிலர் இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டு இதழ் ஒன்று (‘இதயம் பேசுகிறது’ என்று ஞாபகம்) கேரளாவில் வேலுப்பிள்ளையின் உறவினர்கள் என்று சொல்லி ஒரு குடும்பத்தை பேட்டி எடுத்து வெளியிட்டது.

இன்றைக்கு முகநூலிலும் சிலர் இப்படியான கருத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

என்னுடைய அச்சம் என்னவென்றால், நாளை இதையெல்லாம் நம்பி, ‘தெலுங்கர்களுக்கும் மலையாளிகளுக்கும் நடந்த சண்டையில் அப்பாவிச் சிங்களவர்களும், தமிழர்களும் அநியாயமாக கொல்லப்பட்டு விட்டார்கள்’ என்று சொல்லிக் கொண்டு, ஈழத்திலும் ஒரு லூசு உருவாகி விடுமோ என்பதுதான்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.