தெறி சர்ச்சைகள் விட்டபடியில்லை. இப்போது கவிஞர் என்.டி. ராஜ்குமார், “தெறி டைட்டில் என்னுடையது” என போர்க்கொடி தூக்கியுள்ளார். தன்னுடைய முகநூல் பதிவில்,
“அன்பானவர்களே இயக்குனர் அட்லி இயக்கத்தில்உருவான விஜய் நடித்த திரைப்படத்திற்கு எனது புத்தகத்தின் பெயரான தெறி என்கிற பெயரை எனது அனுமதியின்றி வைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏற்கனவே நமக்கு மரியாதைக்குரிய நீலபத்மநாபன் நல்ல உதாரணம். அட்லி இதற்கு விளக்கமளிக்க வேண்டும். படைப்பாளிகளே இந்த அறிவுச்சுறண்டல் நாளை உங்களுக்கும் ஏற்படலாம். நீங்கள் வெறுமனே லைக்போடாமல் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய இலக்கிய வட்டமான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் வெளியீடாக வந்த இந்தத் தொகுப்பு இரண்டாம் பதிப்பாக நூலகத்திலும் எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.