ஜெயலலிதா பற்றி இரட்டை அர்த்தத்தில் பேசிய ஸ்டாலின்; சில கண்டனக் குரல்கள்

முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரக்கூட்டத்தில் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து கண்டனப் பதிவுகள் சில…

நாச்சியாள் சுகந்தி

ஸ்டாலின் ஜெயலலிதா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. பொதுமேடையில், பல ஆயிரம் பேர் சூழ்ந்திருக்கும் சூழலில் பண்பாடு இல்லாமல் பேசும் ஒருவர் எப்படி ஒரு மாநிலத்துக்கு தலைமை தாங்கமுடியும்? மாற்றம் என்பது வெறும் அரசியலில் மட்டும் கொண்டுவருவதல்ல.
சமூக வெளியில், பொருளாதரத்தில், பண்பாட்டுகு கூரூகளில், கலாச்சாரத்தில் என அனைத்து தளங்களிலும் மாற்றத்தைக் கொண்டுவருவதுதான் ஒரு பேரியகத்த்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.
மேடை கிடைத்தது என்று எப்போதும் ஒரு பெண் உடலை கொச்ைப்படுத்துவதும் அதற்கு தொண்டர்கள் என்ற பெயரில் கூடியிருப்பவர்கள் கைதட்டி குதுகலிப்பதும் நாகரீகமான சமூகத்தில் மிகவும் அறுவறுக்கத்தக்க மூன்றாம்தர செயல்.


உணமையிலேயே செயலலிதாவின் இந்த மனிததன்மையற்ற போக்கை கண்டிக்க வேண்டுமானாலும் அதை வீதிதோறும் அம்பலப்படுத்துங்கள். மேடைதோறும் அதை மட்டுமே ஒடு தலைப்பாக வைத்து முழங்குக்குகள். இதற்காகவே தனி இணையதள டீம் வைத்து வேலை பார்க்கும் நீங்கள் செயலலிதாவின் ஆணவப் போக்கை இணயம் வழியாக பரப்புங்கள்.

ஆனால் பெண் என்பவள் எந்த வயதில் இருந்தாலும், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவளுடைய உடலை முன்னிறுத்தி, கொச்சைப்படுத்திப் பேசுவது என்பது ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல.அது மேடையில் சத்தம் போட்டு பேசும் ஸ்டாலினின் மனவக்கிரத்தைக் காட்டுகிரது. பெண்கள் மீது அவர் கொண்டிருக்கும் மரியாதையை காட்டுகிரது.ஆனால் இதற்கு கைதட்டியவர்களின் மனநிலை ஸ்டாலினின் மனநிலையை விட மிகவும் ஆபத்தானதும்;அபத்தமனதும் கூட.

பெண்ணுடலை, அவளது பாலியல் விஷயங்களை உங்கள் பேச்சால் மலினப்படுத்தாமல் அரசியல் வளர்க்கத் தெரியவில்லை என்றால், பண்பாட்டு, கலாச்சார வெளியில் உங்களால் என்ன பெரிய, ஆரோக்கியமான மார்றங்களைக் கொண்டுவர இயலும் மிஸ்டர் ஸ்டாலின்?

பிகு: உடனே அதிமுகவில் இவர் அப்படி பேசினார் அவர் அப்படி பேசினர் என்று விவாதிக்க வெண்டாம்.

கீதா நாராயணன்

கட்சி வேறுபாடில்லாமல் இதையும் கண்டியுங்கள். ஜெயாவின் ஊழல்,நிர்வாகச் சீர்கேடு,ஜன நாயகமற்ற போக்கு போன்றவற்றைப் பற்றி அரசியல் விமரிசனங்களை முன்வையுங்கள்! இது சட்டப் படி குற்றமில்லையா? பெண்களை பொது வெளியில் பாலியல் இழிவு படுத்துவதை எதிர்த்து குரல் கொடுங்கள்.

சோனியா அருண்குமார்

என்ன வேண்ணா பேசிட்டு சிரிச்சுக்கிட்டே சும்மா சொன்னேன் வேறொன்னுமில்லனு சொன்னா போதும்போல ?! இந்த பேச்சை பார்க்கும்போது பழைய ட்வீட் ஒன்னு தான் நியாபகத்துக்கு வருது : “என்ன வேண்ணா பேசிட்டு சும்மா சொன்னேன்னு சொல்லி தான் பல காயங்கள் ஏற்படுத்தப்படுகின்றன” !!

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.