இயக்குநர் ராம்கோபால் வர்மா, ரஜினி பற்றிய கமெண்டுகள் சர்ச்சையை கிளப்பியிருக்கின்றன. அழகு குறித்தும் அசிங்கமான இவர் எப்படி சூப்பர் ஸ்டார் ஆனார் என்பது பற்றியும் ராம்கோபால் வர்மாவின் ட்விட்டுகள் ரஜினி ரசிகர்களை கொதிப்படைய வைத்திருக்கின்றன..
பத்திரிகையாளர் கதிர்வேல் தன்னுடைய முகநூலில் ராமின் ட்விட்டுகளை தமிழில் தந்திருக்கிறார். ராமின் ட்விட்டுகளுடன் சேர்ந்து படியுங்கள்…
(சர்ச்சைகளில் திளைக்கும் டைரக்டர் ராம்கோபால் வர்மா நேற்று போட்ட 5 ட்விட்டர் கமென்ட்ஸ்).
11.52: அழகாக இருந்தால்தான் சினிமாவில் புகழ் பெற முடியும் என்ற கருத்தை தகர்த்து விட்டார் இந்த ஆள்.
12.03: அவரை பார்க்க சகிக்காது. சிக்ஸ் பேக் கிடையாது. குள்ளம். உடல் அமைப்பே சரியில்லை. டான்ஸ் ஆட தெரியாது.
12.06: இது மாதிரி ஒரு ஆள் சூப்பர் ஸ்டார் ஆவது உலகத்தில் வேறு எங்கேயும் நடக்காது. இவரை இப்படி ஆக்க கடவுளுக்கு இவர் என்ன கொடுத்தார் என்று தெரியவில்லை.
12.11: சினிமாவில் ரசிகர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்பதற்கு உதாரணம் ரஜினி சர்.
12.20: ரஜினி என்ற ஆச்சரியத்துக்கு அர்த்தம் கண்டுபிடிக்க முயன்றால் தலைசிறந்த உளவியல் நிபுணர்களும் தலைசுற்றி விழுவார்கள்.