அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் வேட்பாளர் மாற்றக் கோரியும், தன்னை வேட்பாளராக அறிவிக்கவில்லை என்பதால் கட்சிப் பணி ஆற்றுவதில்லை என்றும், கட்சியில் இருந்து விலகுவதாகவும் உள்கட்சி பூசல் நடந்துவரும் நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளில் வேறுபட்ட காட்சியைப் பார்க்க முடிகிறது.
விளவங்கோடு தொகுதியில் 2011 -ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டவர் லீமாரோஸ். திங்கள் கிழமை காலை விளவங்கோடு தொகுதியில் ஆர்.செல்லசுவாமி வேட்பாளராக கட்சி அறிவிக்கப்பவுடன் லீமாரோஸ் அவருக்காக சுவர் எழுத்துப் பணியை மேற்கொள்ளும் படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. “எங்கள் கட்சியினரை அர்ப்பணிப்பைப் பார்த்தீர்களா?” என்று கம்யூனிஸ்ட் தோழர்கள் சிலாகித்து வருகிறார்கள்.