விடுதலை ராஜேந்திரன், திராவிடர் விடுதலைக் கழகம்
ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு 2.5 லட்ச ரூபாய் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டம் ஒன்றை 2013 ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசு அமுல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தின் பெயர் ”அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமண திட்டம்” என்பதாகும்.
இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 500 தம்பதியினருக்கு இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.ஆனால் இதுவரை இந்த நிதி உதவியை பயன்படுத்திக் கொண்டவர்கள் வெறும் 19 பேர் மட்டும்தான். தமிழகத்தின் ஒருவர் கூட இல்லை.தமிழக அரசின் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கோ, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளுக்கோமத்திய அரசின் திட்டம் ஒன்று இப்படி இருக்கிறது என்பது கூட தெரியாத நிலையில் இருக்கிறார்கள்.
மாநிலங்கள் அவையில் ஜார்கண்ட் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சமூக நீதித்துறை அமைச்சர் விஜயபாலா என்பவர் தமிழகத்தில் இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள எவருமே முன்வரவில்லை என கூறி இருக்கிறார்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டியவர்கள் :
முதலில் யாராவது ஒருவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவராக இருக்கவேண்டும்.
ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் இருக்கக்கூடாது. திருமணம் செய்து கொண்ட ஓராண்டிற்குள் இந்து திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கவேண்டும் என்று நிபந்தனைகள் இருக்கின்றன.
இத்திட்டத்தில் பலனடைய வேண்டும் என விரும்புகிறவர்களுக்கு உதவுவதற்காக ”கலப்புத்திருமண தம்பதிகள் சங்கம்” எனும் அமைப்பு முன்வந்திருக்கிறது. அந்த அமைப்புடன் தொடர்பு கொள்வதற்கான எண்: 9442927157
முகப்புப் படத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட மகேஷ்- திவ்யா இணையர்.
வெறும் பணம் கொடுத்து உதவினால் மட்டும் இப்பிரச்சினை தீர்ந்து விடாது . தகவல் நுட்பத் துறையில் பணிபுரிவோரிடம் இந்த காதல் திருமணங்கள் நடக்கின்றன .பொருளாதார ரீதியில் அவர்கள் நூறு விழுக்காடு அரசை எதிர்பார்ப்பது இல்லை ..அவர்கள் கேட்பதெல்லாம் சாதி மறுப்பு திருமணம் செய்கிறவர்களை எந்த சாதியில் சேர்க்கிறீர்கள் .அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பள்ளிச் சான்றிதழிலில் எந்த ஜாதியில் சேர்க்க வேண்டும் சமூகத்தில் போராடி நிற்கும் இவர்களுக்கு பிறக்கும் குழந்தை களுக்கு தனியே இட ஒதுக்கீடு கொண்டு வர முடியுமா
என்பதே .
LikeLike
ஜாதியை ஒழிக்க ஒரே வழி தான் உள்ளது.குழந்தையை பள்ளியில் சேர்க்கும் போதே t c.ல் ஜாதி என்ற பிரிவில் இந்தியன் என்று கொடுத்தால் போதும்.
LikeLike