தொலைக்காட்சி ஊடகங்கள் முதல் அனைத்து ஊடகங்களும் பெரிய தேர்தல் கட்சிகளின் அஜண்டாவை மையப்பத்தியே விவாதங்களை நடத்துகின்றன.
திட்டமிட்டு மக்கள் மைய அரசியல் இயக்கங்கள் இந்த விவாதங்களில் புறக்கணிக்கப்படுகின்றன.
இந்த பெரிய அதிகார மைய கட்சிகள் ’மக்கள் போராளிகள் போலவும், புரட்சிகர அரசியலை செய்வது போலவும் படம் போடுவதை காண சகிக்க முடியவில்லை.
பொதுமக்கள் மீது தேர்தல் அரசியல் மீதும், அரசியல் கட்சிகளின் மீதும் ஒரு நம்பிக்கையை வரவழைக்க முயலுகின்றனர்.
தேர்தல் கமிசனும் நேர்மையாக நடப்பது போன்று சராசரி மக்களை வதைத்துக் கொடுமை செய்து கொண்டிருக்கிறது. தனிப்பட்ட செலவுகளுக்கு எடுத்துச்செல்லும் பொதுமக்களின் நிதியை கேள்விக்குள்ளாக்குவதும், பெரிய கட்சிகளின் பணப்புழக்கத்தினை கேள்விக்குள்ளாமல் நழுவிச் செல்வதும் நடக்கிறது. பெரிய பணப்புழக்கம் இல்லாமல் எப்படி பெரிய மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் நடக்கின்றன என்பது தெரியவில்லை.
முகநூலில் இருக்கும் தேர்தல் கட்சிகள் சாராத தோழர்களுக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது. தொலைக்காட்சி ஊடகங்கள் எதை மறைக்கிறதோ அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு நம்முடையது.
நடுநிலையாளர்கள் என்கிற பெயரில் ‘எந்த அரசியல் கோட்பாட்டிற்கும், போராட்டத்திற்கும் சொந்தமில்லாத ‘சாம்பார்’வாசிகளை வைத்து நடக்கும் விவாதங்கள் மக்களை மொன்னையாக மாற்றுவதை தடுக்கப்படல் வேண்டும். கடந்த 5 வருடங்களில் தமிழகத்தின் அரசியல் சூழலை நிர்ணயித்த இயக்கங்கள், தலைவர்கள், போராளிகள் பங்குபெறாத விவாதங்களே இன்றய அரங்கினை நிரப்புகின்றன. இது திட்டமிடப்பட்ட ஒரு செய்தி பரவலை சாத்தியமாக்குகின்றன. இதை அம்பலப்படுத்த விரும்புகிறோம்.
ஒரு அரசியல் கட்சி மற்றொரு அரசியல் கட்சியை பாதுகாக்கிறது. இதை பூசி மொழுகும் பணியை ஊடகங்கள் திறம்பட செய்கின்றன.
இக்கட்சிகளின் வெட்டி சவடால் அறிக்கைகளை கேள்விக்குள்ளாக்குவோம். அரசியல் சாசனத்தின் படியும், அரசின் வடிவமைப்பின் படியும், அரசின் வருவாயின் படியும், மசோதாக்களின் படியும் செய்ய இயலாத திட்டங்களை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்ற அயோக்கியத்தனத்தினை அம்பலப்படுத்த முன்வாருங்கள்.
மக்கள் பிரச்சனைகளை மையப்படுத்துங்கள். தேர்தல் கட்சி தலைவர்கள் இவற்றிற்கு பொறுப்பேற்க செய்வோம்.
எம் முகநூல் பதிவுகள் மக்களின் பிரச்சனைகளை மையப்படுத்தவே பயன்படுத்தப்படும் என்கிற உறுதியோடு இதை முன்மொழிவோம்.
போலியான வாக்குறுதிகளோடு வடிவமைக்கப்படும் மாய செய்தி உலகில் இருந்து மக்களை விடுதலை செய்வோம்.
உண்மைதான். ஏற்கனவே,தொலைகாட்சி ஊடகங்கள், தங்கள் பேராசையால் மக்கள் நலத்திற்கு ஒவ்வாத முறையில், அளவு கடந்த விளம்பரங்களில், நம் கட்டுப்பாட்டை மீறும் ஒலியில் தந்து,இதனால் தன தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டன. இந்த ஊடகங்கள், தேர்தல் காலத்தில்,காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்று கருதி, நாலு காசு பார்க்க ஆசைப் பட்டு தங்கள் தொழில் தர்மத்தை காற்றில் பறக்க விட்டு விட்டு, நான்காவது தூண் என்பதற்கான தகுதியையும் இழந்து வருகின்றன. மக்களை அச்சுறுத்தி, சமூக ஊடகங்களை நோக்கி,ஓட ஓட விரட்டுகின்ற இதே ஊடகங்கள்,கொடுமை, கொடுமை என்று கோயிலுக்குப் போனால் அங்கே ரெண்டு கொடுமை வந்து டிங்கு டிங்கு வென்று ஆடியதாம் என்பது போல்,இங்கேயும் அதாவது இணைய தளங்களிலும் தங்கள் தடம் பதித்து அதே ,தரமற்ற அரைகுறைச் செய்திகளை ஒருதலைப் பட்சமாக, e-newsஎன்ற பெயரில் தந்து,கொடுமைகளை இங்கும் தொடர்கின்றன.மேற்படி பயனற்ற விவாதமேடைகள் மூலம், நமது பொன் போன்ற காலத்தை,கொலை செய்யும் இந்த ஊடகங்களின் செயல்பாடுகள் அப்பட்டமான,மனித உரிமை மீறல்கள் ஆகும்.நம்மிடம் வாங்கும் காசுக்கு தரமான பொழுதுபோக்கு மற்றும் செய்திகளைத் தரத் தவறும் இந்த ஊடகங்கள் ,நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறுகின்றன .மக்களின் மாண்புகளை மேம்படுத்தக் கடமைப் பட்டுள்ள இந்த ஊடகங்கள் தங்கள் செயகடமைகளைப் புறக்கணித்ததோடு நில்லாமல் ,மாண்புகளைச் சிதைக்கும் செயல்களையும், தரங்கெட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நம் மீது திணிப்பதன் மூலம் செய்கின்றன.தொலை த் தொடர்புத துறை கண்காணிக்க வேண்டும்.இலவச சேனல்கள் என்றாலும், விளம்பரங்களை நம் வீட்டு வரவேற்பறைக்குள் வந்து கத்துவதற்கு இவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.விற்பனையாளர்கள் தங்கள் பொருள்களை சந்தைப் படுத்துவதற்கு தனி சானல்களை வைத்துக் கொள்ள வேண்டும். பொருள் தேவைப் படும்போது, நாமே அத்தகு சேனல்களில் சென்று பார்த்து தேர்ந்தெடுத்து, பின்னர் கடைகளுக்கு சென்று வாங்கி கொள்ளப் போகிறோம். இன்றே இறக்கப் போகிறவர்கள் மாதிரி, விளம்பரங்களில் இவர்கள் காட்டும் பரபரப்பு, நம் அவசரகதியான வாழ்க்கையில் மேலும் பதட்டத்தைத் திணிக்கிறது. என்ன கொடுமை இது?கேட்க நாதியில்லை என்றா இப்படி செய்கிறார்கள்? ஆம். மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளில் பெரும்பாலோர், அதிகார போதைகளுக்கும், சுக போகங்களுக்கும் அடிமைப் பட்டு மக்களை அனாதைகள் ஆக்கி விட்டனர். இது விதியல்ல, சதி. இந்த சதிகளை, மதியால் முறியடிப்போம், மாற்றம் கொண்டு வர வேண்டியது மக்களின் கடமை .தேர்தலில் புரட்சி ,
காலத்தின் கட்டாயம்!
LikeLike