Swara Vaithee

தெறி படத்திற்கு அதிகமா காசு வசூலிப்பதை பாலிமர் தொலைக்காட்சி நேற்று அம்பலப்படுத்தி இருக்கிறது! கோயம்பத்தூர்ல ஒரு தியேட்டருக்கு போய் வீடியோ எடுத்து அம்பலப்படுத்தி இருக்காங்க.. ஆனா பாலிமர் காரங்க திருட்டு விசிடி தயாரிக்கறாங்கன்னு சொல்லி கேமரா மேனை போலீஸ்ல புடிச்சி குடுத்துருக்காங்க!
போலீஸ் அந்த கேமராவை வாங்கி பாத்து எதுவும் இல்லைன்னு திருப்பி குடுத்துட்டாங்க.. ஆனா தெறி படத்தோட தயாரிப்பாளர் தாணு, பாலிமர் டிவி திருட்டு விசிடி தயாரிக்குதுன்னு புகாரா சொல்லியிருக்காரு!
அட்சுவலா தியேட்டர்ல முதல் மூணு நாள் அதிக கட்டணம் வசூலிப்பது வாடிக்கை தான். தியேட்டர்கள் தங்களுக்கான பணத்தை பாப்கார்ன்,பெப்சில தான் எடுக்க முடியும். இந்த திருட்டு தனத்துல தியேட்டர்,தயாரிப்பாளர்னு எல்லாருக்கும் பங்கு இருக்கு.ஆனா இதைப் பத்தி யாரும் வெளிப்படையா பேச மாட்டாங்க!
பேசுனா பாலிமருக்கு ஆன நிலை தான் ஆகும். பாலிமருக்கு ஆதரவா எத்தனை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்குன்னு பாத்தாலே தெரியும்.
பாலிமர் தொலைக்காட்சி போன்றவர்களை நாம் ஆதரிக்க வேண்டும். ஒரு நாலு தொலைக்காட்சி இது மாதிரி அம்பலப்படுத்துனாலே போதும். இனி அதிகமா காசு வசூலிக்க பயப்படுவானுங்க! ஐ சப்போர்ட் பாலிமர்!