#தெறி:“நல்ல தமிழ் படங்கள இப்படி காப்பி அடிச்சு நாசமாக்றீங்களே, அட்லீ”

ஜி. விஜயபத்மா
vijayapadma
ஜி. விஜயபத்மா

எந்த ஒரு விசயத்துல ஈடுபடும் முன்பும் mindsetனு ஒண்ண நம்ப subconscious mind..பட்டுனு consious mindக்கு transferபண்ணிடும். நாம அதுக்கு நம்பளயும் அறியாம தயாராகிடுவோம். அதாவது சுவிஷேச கூட்டத்துக்கு போறோம்னா வாய் தானா ஜீஸஸ்னு சொல்லும். திருப்பதி போனா கோவிந்தான்னு சிலிர்க்கும். அதுமாதிரி தளபதி விஜய் படத்துக்கு போனா இப்படித்தான் இருக்கும்னு தெரிஞ்சுதான”தெறி”மாஸ் ஆக்ஷன் படம் பார்க்க போறோம். அப்புறம் படம் பார்த்துட்டு அட்லீங்கிற இயக்குனர நான் எப்படி திட்டி விமர்சனம் எழுத முடியும்?

கனடா சினிபிளக்ஸ் தியேட்டர்ல நைட்ஷோ பார்த்துட்டு அந்த நடுக்குற குளிர்ல என் எமோஷன் தாங்காம வியர்த்தது. வீட்டுக்கு வந்ததும் கண்ணாடிக்கு முன்னாடி நின்னு என்னை நானே திட்டிகிட்டேன். பேபி…தாங்கலப்பா.ஜி.விபிரகாஷ் ஒரே நேரத்துல நாம ஜேம்ஸ்பாண்ட மாதிரி சவாரி செய்ய முடியாது. ப்ளீஸ் இனி நீங்க நடிக்க மட்டும் செய்யலாமே. படத்துல மட்டும்தான் பிரதர் நாம டூப் போடணும் தெறில உங்க டூப் யாரோ மியூசிக் போட்டுடாங்க பிரதர். பீ கேரஃபுல்!அடலீ உங்க மேக்கப்மேன கோஞ்சம் கவனிங்க.. உங்க மேடை பேச்சு மாதிரியே அவரும் கொஞ்சம் ஓவரா மேக்கப் எல்லோர் மூகத்திலேயும் அன்பா அப்பிட்டார்.

மிஸ்டர் ஜார்ஜ் ..நீங்க பாவம். நீங்கதான் ஒளிப்பதிவாவாமே..பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். “கத்தியில போடறது ஈஸி.பேனா எடுத்து எழுதுறது கஷ்டம்”உணர்ந்து எழுதிய வசனம் போல் தெரிகிறது ரமணகிரிவாசன்.விஜய் படத்துக்கு வசனம் எழுதுறது walkபடத்துல கயிறு மேல நடக்கிறமாதிரி அவ்வளவு சிரமம். ஆனாலும் ரமணன் கிடைச்ச இடத்துல நின்னு கபடி விளையாடி இருக்கிறார்.

கிளைமாக்சில் நேதாஜி பற்றி பேசுவது.”எப்ப உன் பையன் ரேப் பண்ணி ஒரு பொண்ண கொலை செஞ்சானோ அப்வே நீ அப்பனா தோத்துட்ட.. அவங்க அம்மாவ நீதான் கொன்னேனு தெரிஞ்சும் சாரி கேட்டுட்டா மன்னிச்சு விட்டுடலாம்பான்னு எப்ப என் பொண்ணு சொன்னாலோ அப்பவே அப்பனா நான் ஜெயிச்சிட்டேண்டா” என்ற இடத்தில் வசனகர்த்தாவாக சிக்ஸர் அடிச்சிட்டீங்க ரமணன். நல்ல ஸ்கிரிப்ட கிடைத்தால் உங்க எழுத்து உயிர் பெறும்.

அடலீக்கு ஒரு கேள்வி விஐய் பார்க்க போற பொண்ணு சுனைனா..ஒரு ஐயர் பொண்ணுனு காட்றீங்க அதன் மூலம் நீங்க என்ன சொல்ல வர்றீங்க?முதல்ல ஜாதியத்தாண்டி வாங்க பாஸ். சென்டிமெண்ட் ஸீன் வச்சா படம் பிச்சிக்கும்னு யாராவது உங்ளுக்கு வேப்பிலை அடிச்சி ஏத்தி விட்டாங்களா படம் முழுக்க அழுகாச்சியா இருக்கு. அதே போல ஹீரோ சென்டிமெண்ட்னா அழணும்னு உங்க இயக்குனர் சங்கர் பாடம் எடுத்தாரா? டாக்டர்ஸ்ஆபிஸர்ஸ் எல்லோரும் அழறாங்க. கலைப்புலி தாணு உங்க படத்துக்கு கிளிசரின் வாங்கியே காலி ஆயிருப்பார்னு நினைக்கிறேன். நல்ல சம்பளம் வாங்கி இருப்பீங்க.

அடுத்து தெலுங்குல மகேஷ்பாபு படம் பண்ண போறதா கேள்விப் பட்டேன்.பளீஸ் அப்படியே போய்டுங்க. நல்ல தமிழ் படங்கள இப்படி காப்பி அடிச்சு நாசமா ஆக்றீங்களே..இது உங்களுக்கே அநியாயமா தெரியல..ப்ளீஸ் போங்க போயி தெலுங்கு தேசத்த காப்பாத்துங்க. ஆள் தமிழ் ஹீரோஸ் பாவம்!

கடைசியா ஒரு வார்த்தை அந்த முள்ளும்மலரும் லாபாயிண்ட், உதிரிபூக்கள் கிளைமாக்ஸ்..மெல்லிய மெட்டி ஒலியில் காதில் கவிதை சொன்ன மகேந்திரன் இயக்குநர் அத்தனை ரவுடிகளும் தெறியாக சண்டை போடும்போதும் அசத்தலாக கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து அப்படி ஒரு லுக் விடுகிறாரே அப்படிதான் இன்னமும் எங்கள் மனதில் இயக்குநராக சிம்மாசனத்தில் உட்கார்ந்து இருக்கிறார். அவரை நடிகராக்கி ஒரே படத்தில் காலியாக்கி 70வயது கம்பீரத்தை தலைகீழாக கட்டி தொங்க விட்டிட்டீங்களே அட்லீ…you are too bad!

ஜி. விஜயபத்மா, எழுத்தாளர்; இயக்குனர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.