துச்சேரி அரசின் கல்வித்துறை, ரீடிங் கார்னர் என்ற பள்ளி நிகழ்விற்கு சுமார் 100 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு சில புத்தகங்களை பரிந்துரைத்திருந்தது. இதில் பாலியல் பேசும் சில சிறுகதைத் தொகுப்புகளும் இடம் பெற்றிருந்தன. 12 வயது மாணவர்கள் படிக்க வேண்டிய புத்தகங்களா இவை என புதுவை சீ.நா. கோபி, தி டைம்ஸ் தமிழில் பிரத்யேகக் கட்டுரை எழுதியிருந்தார். சமூக ஊடகங்கள் வழியாக பரவலாக சென்றடைந்த இந்தக் கட்டுரை மூலம், பலர் புதுச்சேரி அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பல்வேறு தரப்பிலிருந்து வந்த விமர்சனங்கள் காரணமாக சர்ச்சைக்குரிய புத்தகங்களை புதுச்சேரி அரசு திரும்பப் பெற்றிருப்பதாக கட்டுரையாளர் புதுவை சீ. நா. கோபி தெரிவித்துள்ளார்.