நேற்று தொடங்கிய மக்கள் தேமுதிகவுக்கு தொகுதி; ஆதித்தமிழர் கட்சிக்கு திமுகவின் இதயத்தில் மட்டும் இடமா?

நேற்று தொடங்கிய மக்கள் தேமுதிகவை அழைத்து தொகுதி ஒதுக்கும் திமுக, நீண்ட காலமாக திமுகவை ஆதரித்துவரும் அதியமான் தலைமையிலான ஆதித்தமிழர் கட்சிக்கு ஏன் தொகுதி ஒதுக்கவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.
வே. மதிமாறன்

‘சீட்டு குடுக்கிறேன் வா’ என்று கண்ட கண்ட கழிசடைகளையெல்லாம் இன்னும் கூவி கூவி கூப்பிடுகிற திமுக, தன்னுடனே இருக்கும் ஆதித் தமிழர் பேரவைக்கு இன்னும் எத்தனை தொகுதிகள் என்பதை ஏன் அறிவிக்காமல் இருக்கிறது?
அங்கீகாரமே தரக்கூடாத பல சந்தவர்ப்பாவத கட்சிகளுக்கும், ஜாதிக் கட்சிகளுக்கும் சீட்டு தருகிறவர்கள், தலித் மக்களிலேயே மிகவும் பின் தங்கியிருக்கிற,அருந்ததியர் மக்களுக்கான கட்சியின் தேர்தல் அங்கிகாரத்தை மறுக்கிறார்கள்?

திமுக; ஆதித் தமிழர் பேரவைக்கு தேர்தலில் வாய்ப்புத் தராமல் புறக்கணித்தால், நிச்சயம் அது அருந்ததியர் மக்களின் அங்கீகாரத்தை மறுப்பதாகவே வரலாற்றில் பதியப்படும்.

வேந்தன். இல

நேற்று ஆரம்பித்த ம.தேமுதிகவிற்கு திமுக அழைத்து தொகுதி கொடுக்கிறது. ஆனால் சாதி ஒழிப்புக்காக தொடர்ந்து போராடிவரும் ஆதித் தமிழர் பேரவைக்கு கரம் நீட்டவில்லை திமுக.

இத்தனைக்கும் ஆதித் தமிழர் பேரவை நீண்ட நாட்களாக திமுகவை ஆதரித்து வந்த இயக்கம். ‘சமூக நீதி கட்சி’ – திமுக என்று நம்பியிருக்கும் சிலருக்காகவாவது ‘ஆதித் தமிழர் பேரவை’ அமைப்புக்கு இடம் கொடுத்திருக்கலாம்!

ஆதித் தமிழர் பேரவைக்கு இடம் கொடுத்தால், அது நிச்சயம் பாராட்டுதற்குரியது! செய்யுமா திமுக?

Leo Joseph D

புதிய தமிழகம் கட்சிக்கு நாலே சீட்டுகள், ஆதித் தமிழர் பேரவைக்கு இதயத்தில் மட்டும்தான் இடம் கொடுப்பார் போல.. மீண்டும் சொல்கிறேன், திமுக இடைநிலை ஆதிக்க சாதிகளின் கட்சி!

நேத்து பிரஸ்மீட் வச்சு கட்சி பேரை சொன்னவனைக் கூட இன்னைக்கு கூப்ட்டு சீட் ஷேரிங் பேசுற திமுக, ஆதித் தமிழர் பேரவையை கண்டுகொள்ளவே இல்லை. இதான் கருணாநிதி அவர்களின் சமூகநீதி!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் தேமுதிக கட்சி ஒருங்கிணைப்பாளர் சந்திரகுமார், அரசியல் அங்கீகாரத்துடன் மக்கள் தேமுதிக கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கியதற்கு திமுக தலைவர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், ஈரோடு கிழக்கில் தானும்(சந்திரகுமார்), மேட்டூரில் பார்த்திபனும், கும்மிடிப்பூண்டியில் சி.எச்.சேகரும் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கோரிக்கை வைத்துள்ளதாகவும், கோரிக்கையை பரிசீலிப்பதாக கருணாநிதி தெரிவித்ததாகவும் சந்திரகுமார் கூறினார்.

பதிவு 12-4-2016 அன்று இரவு 23.00 க்கு மேம்படுத்தப்பட்டது.

One thought on “நேற்று தொடங்கிய மக்கள் தேமுதிகவுக்கு தொகுதி; ஆதித்தமிழர் கட்சிக்கு திமுகவின் இதயத்தில் மட்டும் இடமா?

  1. 8 மாத தமாகாவிற்கு, அதுவும் நேற்று வரை அதிமுகவுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டவருக்கு 80 ஆண்டு கால கம்யூனிஸ்ட் கட்சியை விட அதிக தொகுதி ஒதுக்குகிறார்களே?
    இதில் எங்கு இருக்கிறது மக்கள் நலன்?

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.