கொல்லம் அருகே கோயில் திருவிழாவில் நடந்த பட்டாசு விபத்தில் 107 பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட பாஜகவும் அதன் முன்னோடி இயக்கமான ஆர் எஸ் எஸ் முயல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொதுவாக ஒரு பெரும் விபத்து அல்லது அழிவு ஏற்பட்டால் நாம் என்ன செய்வோம் ? ஆபத்தில் நிற்பவர்களை மீட்க நாம் என்ன உடை உடுத்தியிருப்போமோ அதனை போட்டு கொண்டே மீட்பதற்காக ஓடுவோம்.
இங்கே, ஆபத்தில் ‘என்னை காப்பாற்றுங்கள்’ என ஆர்எஸ்எஸ்காரர் ஒருவரை அழைத்தால் ‘ இரு வீட்டில போய் நிக்கர் போட்டுக்கிட்டு வந்து காப்பாற்றுகிறேன்’ என சொல்லிவிட்டு, நிக்கர் போட்ட பின் படம் பிடிக்க வருவது தான் ஆர்எஸ்எஸின் வாடிக்கையாகிவிட்டது.