அ. மார்க்ஸ்

(பத்திரிகையாளர்களின் பொறுப்பு குறித்து ஒரு சொல்)
பத்திரிகைகள் ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று. பொதுக் கருத்துக்களை உருவாக்குவதில் பத்திரிகைகளுக்குப் பெரும் பங்குண்டு. சமூக அமைதியை மட்டுமல்ல, வெறுப்பையும் அமைதியின்மையையும் வன்முறையையும் உருவாக்கும் சாத்தியம் பத்திரிகைச் செய்திகளுக்கு உண்டு.
பத்திரிகைச் செய்திகளின் நம்பகத் தன்மையின் அடிப்படையில்தான் பல நேரங்களில் நீதிமன்றங்கள் கூடக் கருத்துக்களைத் தெரிவிக்கின்றன; நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன.
அந்த வகையில்தான் பல கருத்து மாறுபாடுகள் இருந்தபோதும் The Hindu போன்ற இதழ்களை நாம் சில அம்சங்களில் மதிக்க வேண்டி உள்ளது. Readers editor என ஒருவரை நியமித்து தகவல் பிழைகளுக்கு வருத்தம் தெரிவித்து உடனுக்குடன் திருத்துவதோடு, வாசகர் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செய்திகளில் வெளிப்படும் பார்வைத் தவறுகளையும் கூடச் சுய பரிசோதனை செய்துகொள்வது போற்றத் தக்க ஒரு பண்பு.
கூடியவரை ஒரு கருத்தை எழுதுமுன் பல ஆதாரங்களையும் ஒப்பிட்டுத் தன் தகவலைச் சரிபார்த்துக் கொள்வதும், அப்படியும் ஒரு வேளை பிழை ஏற்பட்டு அது சுட்டிக்காட்டப்பட்டால் உடன் வருத்தம் தெரிவித்து திருத்தம் வெளியிடுவதும் ஆக ஒரு பத்திரிகையாளனின் அடிப்படையான பண்பு.
ஆனால் இன்று ஒரு பத்திரிகையாளர், அவர் எழுதிய தகவல் தவறு என நிறுவப்பட்ட பின்னும் வருத்தம் தெரிவிக்க முடியாது என அடாவடித்தனம் பண்ணுகிறார். இன்னொருவர் அப்பட்டமாகத் தலித் விரோதப் போக்குடன் பல பதிவுகளைப் போட்டுவிட்டு, அது சுட்டிக்காட்டப்பட்ட பின்னும் அதை நீக்கவோ வருத்தம் தெரிவிக்கவோ மறுக்கிறார்.
இதெல்லாம் தமிழ் ஊடகச் சூழல் இழிந்து வருவதற்கு ஒரு சான்று. இவர்கள் பத்திரிகைகளில் எழுதும் எழுத்துக்களை இனி நாம் எப்படி நம்புவது?
இளம் பத்திரிகையாள நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். உங்களுக்கு முன்மாதிரியாக இப்படியானவர்கள் இருக்க வேண்டாம். “எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம்” எனும் நம் மூத்த முன்னோடிப் பத்திரிகையாளன் பாரதியின் குரலை மறந்துவிடாதீர்கள்.
அ. மார்க்ஸ், ஓய்வு பெற்ற பேராசிரியர்; மனித உரிமை செயல்பாட்டாளர்.
அரசியல் நிலைப்பாட்டில் யுவகிருஷ்ணா, அருள் எழிலனுடன் ஏற்பட்ட தன்னுடைய தனிப்பட்ட கருத்து மோதலை வைத்து, இப்படியொரு பொதுப்படையான அபிப்ராயத்தை அ.மார்க்ஸ் ஏற்படுத்துகிறnர். தலித்துக்கு எதிராக யுவகிருஷ்ணா எழுதியதான ஒரு தோற்றத்தை அவர் வலிந்து ஏற்படுத்துவதோடு, அவரை விலக்கிவிடுங்கள் என்று சொல்லும் அ.மார்க்ஸ், பொதுவெளியில் சாதியை வைத்து கருணாநிதியை ஆண்டை மனோபாவத்தில் பேசிய வைகோவை ஆதாpக்க சொல்கிறnர். அவர் தலைமையில் தமிழகம் ஒன்றுசேர வேண்டுமாம்.
அ.மார்க்ஸ் சொல்லும் போது புனித கோஷம் போடுவதற்கும், அவர் மறுக்கும் போது ஒழிக கோஷம் போடுவதற்கும் மற்றவர்கள் ஒன்றும் எந்திரங்களோ, இவரது அடிமைகளோ இல்லை.
LikeLike