மனுஷ்யபுத்திரன்

வைகோ எதை வேண்டுனாலும் பேசுவார், அடிகிடைக்கும் என்று தெரிந்ததும் மன்னிப்புக் கேட்பார் என்றால் இந்த தந்திரத்தை எல்லோரும் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். இது தேர்தல் களத்தை பெருமளவு சீரழித்து விடும். சாதி ரீதியாக இழிவுபடுத்தும் சொற்களைபேசுவது, ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுகளை கூறுவது தேர்தல் விதிமுறைகளின்படி மிகக்கடுமையான குற்றம். தேர்தல் ஆணையம் தானாக முன் வந்து வைகோ மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் ஆணையர் தேர்தல் விதிமுறைகளைப் பற்றி பேசுவது மிகப்பெரிய கேலிகூத்தாகிவிடும்.
வைகோ இந்த டிராமாவை நேற்று நடத்தியதன் நோக்கம் கலைஞரை இழிவு படுத்துவதற்காக மட்டுமல்ல, அதிமுகவில் வேட்பாளர்கள் மாற்றம், சந்திரகுமாரின் ஆணித்தரமாக குற்றச்சாட்டுகள் ஆகியவற்றிலிருந்து அனைவரின் கவனத்தையும் திசை திருப்பவே.
கீழே பத்துரூபாய் நோட்டை போட்டுவிட்டு ‘ இதோ பணம் கிடக்கிறது’ என்று சொல்லி நம்கவனத்தை திசை திருப்பிவிட்டு சூட்கேஸை பிடுங்கிக்கொண்டு ஓடும் திருடனுக்கும் வைகோவின் இந்த செயலுக்கும் நடுவே அதிக வித்தியாசம் இல்லை.
மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர்; உயிர்மை இதழின் ஆசிரியர்.