அதிமுக வேட்பாளர்களுக்கு எதிரான புகார்களை புத்தகம்போட்டு அதிமுகவினர் விநியோகம்: கடும் அதிர்ச்சியில் தலைமை

அ.தி.மு.க.,வில் வேட்பாளர் பட்டியல் வெளியானதும், அதில் பல்வேறு புகாருக்கு உள்ளானவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதை பார்த்ததும், கட்சியினர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.சம்பந்தப்பட்ட வேட்பாளர்களை மாற்றக் கோரி, கட்சி தலைமைக்கு புகார் மனுக்களை அனுப்பி வருகின்றனர். கட்சியினரிடம் இருந்து வேட்பாளர்கள் மீது குவியும் புகார் மனுக்கள், கட்சி தலைமையையும், கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கட்சியினர் வேண்டுகோளை ஏற்று, சில வேட்பாளர்களை, கட்சி தலைமை மாற்றி உள்ளது. அதே பாணியில், புகாருக்குள்ளானவர்கள் அனைவரும் மாற்றப்படுவர் என்ற நம்பிக்கையில், புகார் மனுக்களை தொகுத்து, கட்சியினர் புத்தகமாக கொடுத்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தொகுதி வேட்பாளராக, சட்டசபை தொகுதி செயலர் மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மீது ஏராளமான புகார்களை, கட்சியினர் தலைமைக்கு தெரிவித்துள்ளனர். இ ந்திய தேர்தல் ஆணையத்திடம், இரட்டை இலை சின்னத்தை முடக்க, கைப்பட கடிதம் எழுதி கொடுத்தவர் இவர்.
12966215_10207368618386320_859131320_n
12935205_10207368617546299_1067846140_n
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தொகுதி, அ.தி.மு.க., கூட்டணியில், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசுக்கு ஒதுக்கப்பட்டது. இவர் தொகுதிக்கு அறிமுகமானவர் என்றாலும், கடந்த கால கட்டப்பஞ்சாயத்து விவகாரங்களால், பெரிய அளவில் பாதிக்கப்பட்ட, கொங்கு வேளாளர் சமுதாயத்தினர் அதிருப்தியில் உள்ளனர். அவரது கட்சிக்கு, தொகுதியில் கிளை எதுவும் கிடையாது.
சேலம்,ஏழாவது வார்டு, அ.தி.மு.க., கவுன்சிலராக இருப்பவர் கே.ஆர்.எஸ். சரவணன் சேலம் கவுன்சிலராக மக்கள் பணி ஆற்றவில்லை என்ற குற்றச்சாட்டு, தொகுதியில் எதிரொலிக்கிறது. இவருக்கு, தி.மு.க.,வினர் நடத்தி வரும், உள்ளூர் சேனலில் தொடர்பு உள்ளதும், போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இப்படி வேட்பாளர்கள் பற்றிய பல புகார்களை புகார் மனுக்களை தொகுத்து, கட்சியினர் புத்தகமாக கொடுத்து வருகின்றனர்.
அ.தி.மு.க., வேட்பாளர்கள் மீது, கட்சியினர் அனுப்பும் புகார் மனுக்கள், கட்சி தலைமையில், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கட்சியினரை சமாதானப்படுத்தும் வகையில், சில வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், அனைத்து வேட்பாளர்கள், மாவட்டச் செயலர்கள், ஆகியோர் குறித்து விசாரித்து, அவர்கள் தொடர்பான விவரங்களை, அறிக்கையாக தரும்படி, உளவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.