பைக் திருடியதற்காக தலித் இளைஞர்களை நிர்வாணமாக்கி, அடித்து ஊர்வலம்; ராஜஸ்தானில் மனுஸ்மிருதி படி தண்டனை

இந்தியாவில் சட்டங்களின் ஆட்சி நடக்கிறதா? மனுஸ்மிருதி ஆட்சி நடக்கிறதா என்கிற குழப்பத்துக்கு இங்கே நடப்பது மனுஸ்மிருதி ஆட்சிதான் என்று நிரூபித்திருக்கிறது ராஜஸ்தானில் நடந்த இந்த சம்பவம். ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கா அருகே உள்ள லஷ்மிபுரா என்ற ஊரைச் சேர்ந்த மூன்று தலித் இளைஞர்கள், (15 வயதிலிருந்து 18 வயது வரையான) பக்கத்து ஊராரின் பைக்கை சில மாதங்களுக்கு முன் திருடியதாகவும் அதை இப்போது ஓட்டி வந்தபோது அவர்களைப் பிடித்த பைக்கின் சொந்தக் காரர்கள் அதாவது ஒடுக்கும் சாதியைச் சேர்ந்தவர்கள் அவர்களைப் பிடித்ததாகவும் செய்தி வெளியிட்டிருக்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ்.

‘பிடிபட்ட’ இளைஞர்களுக்கு மனுஸ்மிருதி வழியில் தண்டனை தரும்விதமாக இவர்கள் அடித்து, ஆடைகள் களையப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு, ஊரை ஊற்றி ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டனர். பிறகு, மரத்தில் கட்டி வைத்து அடிக்கப்பட்டனர். எல்லாம் முடிந்த பிறகு, அங்கு வந்த போலீஸ், அவர்களை மீட்டது. இனி மீட்க என்ன இருக்கிறது. உயிரை மீட்க போலீஸ் வந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அப்பட்டமான மனித உரிமை மீறலை, படமாக்கி இணையதளத்தில் ஓடவிட்டனர் சிலர். எல்லா ஊடகங்களும் தலித் இளைஞர்கள் திருடியதற்காக நிர்வாணமாக்கி அடிக்கப்பட்டதாக செய்தி சொல்கின்றன. செய்தியும் சொல்ல வேண்டும் அதே சமயத்தில், தலித்துகள் மீதான மனித உரிமை மீறலை கேள்விக் கேட்பதாக இருக்கக் கூடாது அல்லது தலித்துகள் மீது எந்தவித இறக்கமும் வந்துவிடக் கூடாது என்கிற வகையில் அவர்களை ‘திருடர்களாக’ முன்னிறுத்தி மனுஸ்மிருதியின் நீதிக்கு ஆதரவு திரட்டும் பணியைச் செய்கின்றன.

கவுரவ் பந்தி என்பவர் இந்த இளைஞர்களின் படங்களை பதிவிட்டதற்காக  இந்தப் படத்தை நீக்கியுள்ளது முகநூல் நிர்வாகம்.

Gaurav Pandhi

 Fb deleted this pic last night terming it as “nudity”. Fair enough! I am posting it again after blurring the “nudity’. [I hope nudity, for people around, doesn’t mean naked truth] Young dalit boys stripped & beaten by the upper caste in Bassi tehsil in Chittorgarh, Rajasthan. Chanting Bharat Mata Ki Jai too wouldn’t have saved them, for they are dalits. Their only way to moksha is by serving the ‘uppercaste’ – as Manusmriti describes. The atrocities against Scheduled Caste & Tribes have only increased and yet a few from uppercaste want to decide the reservation status for the Dalits. Their argument, “caste discrimination doesn’t exist anymore”. I say, it exists within the radius of 100 mts, if measured anywhere in India.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.