‘தேச துரோகி’கள் நிறைந்த ஜேஎன்யூ, எச்என்யூவை சிறந்த பல்கலைக்கழகங்களாக அறிவித்தார் ஸ்மிருதி இரானி!

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகமும், ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகமும் நாட்டின் சிறந்த பல்கலைக் கழகங்களாக விளங்குகின்றன என்று அரசாங்கத்தின் ஆய்வறிக்கைகளே ஒப்புக் கொண்டிருக்கின்றன.தேசியவாதம் மற்றும் பேச்சுரிமை தொடர்பான விவாதங்களில் மத்திய அரசின் படுமோசமான நடவடிக்கைகளின் மூலம் மாணவர் சமுதாயத்தின் மத்தியில் கோபாவேசத்தை எழுப்பியுள்ள இந்த இரு பல்கலைக் கழகங்களும் தான் நாட்டின் முதன்மையான பல்கலைக் கழகங்களில் முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றன. மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்புகளுக்கான வசதிகளைச் செய்து தருவதிலும் சரி, அவர்கள் படித்து முடிந்தபின் அவர்களுக்குப் படிப்புக்கேற்ற வேலை கிடைப்பதிலும் சரி இவை இரண்டும் முன்னணியில் நிற்கின்றன. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தயாரித்துள்ள ஆய்வறிக்கைதான் இவ்வாறு கூறுகிறது.

நாட்டில் இயங்கும் 3500 உயர் கல்வி நிறுவனங்கள் இந்த ஆய்வில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள், மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருந்தியல் கல்வி நிறுவனங்களும் இவற்றில் அடங்கும். ஆனால் இவற்றின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருந்ததால் அவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. முதல் பத்து பல்கலைக் கழகங்களில் தில்லிப் பல்கலைக் கழகமும் வருகிறது. ஆயினும் அது ஜேஎன்யு, ஹைதராபாத் பல்கலைக் கழகங்களுக்குப் பின்னால்தான் இருக்கிறது. முதல் பத்தில் ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகமும் இடம்பெற்றுள்ளது. பல்கலைக் கழகங்களில் பாடங்கள் சொல்லித்தரும் தன்மை, கற்றுக்கொள்ளும் மனப்பாங்கு, ஆராய்ச்சி, படித்துவிட்டு வெளியேறும் மாணவர்களின் வேலைவாய்ப்பு, சமூகத்தில் அவர்களுக்குள்ள பிணைப்பு, பாலின சமத்துவம் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இந்நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன.

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பல்வேறு நிறுவனங்கள் ஆய்வு செய்து, இவ்வாறு அறிக்கையை அமைச்சகத்திற்குச் சமர்ப்பித்துள்ளன. நாட்டிலேயே சிறந்து விளங்கும் மேற்கண்ட பல்கலைக் கழகங்கள் மீதுதான் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. அங்கே பயிலும் மாணவர்கள் குறித்தும், ஆசிரியர்கள் குறித்தும் மிகவும் தரம் தாழ்ந்த முறையில் விமர்சனங்களைச் செய்துகொண்டிருக்கிறது. (ந.நி.)தேசிய கல்வி நிறுவன தரவரிசை சட்டகம் என்பதன் கீழ் வெளியிடப்பட்ட இந்த டாப் 10 பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ‘இந்திய தரவரிசை 2016’ என்ற பெயரில் விக்யான் பவனில் திங்களன்று வெளியிட்டார்.

தரவரிசை முழு பட்டியல் வருமாறு:

டாப் 10 பொறியியல் கல்வி நிறுவனங்கள்

ஐஐடி மெட்ராஸ், ஐஐடி பாம்பே, ஐஐடி காரக்பூர், ஐஐடி தில்லி, ஐஐடி கான்பூர், ஐஐடி ரூர்கீ, ஐஐடி ஹைதராபாத், ஐஐடி காந்திநகர், ஐஐடி ரோபர்-ரூப்நகர், ஐஐடி பாட்னா.

டாப் 10 மேலாண்மை படிப்பு கல்வி நிறுவனங்கள்

ஐஐஎம் பெங்களூரு, ஐஐஎம் அகமதாபாத், ஐஐஎம் கொல்கத்தா, ஐஐஎம் லக்னோ, ஐஐஎம் உதய்பூர், ஐஐஎம் கோழிக்கோடு, சர்வதேச மேலாண்மை நிறுவனம் புதுதில்லி, இந்திய வனமேலாண்மை கல்வி நிறுவனம் போபால், கான்பூர் மேலாண்மை கல்வி நிலையம், ஐஐஎம் இந்தூர்.

டாப் 10 பல்கலைக்கழகங்கள்

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் பெங்களூரு, ரசாயன தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் மும்பை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம், தேஜ்பூர் பல்கலைக்கழகம் அசாம், தில்லி பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் திருவனந்தபுரம்,  பிட்ஸ் பிலானி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்.

டாப் 10 பார்மசி (மருந்தியல்) பட்டப்படிப்பு கல்வி நிறுவனங்கள்

மணிப்பால் பார்மசி கல்லூரி, பார்மசூட்டிக்கல் அறிவியல் பல்கலைக்கழகம், சண்டிகர், ஜாமியா ஹம்தர்த், புதுதில்லி, பூனா மருந்தியல் கல்லூரி, இன்ஸ்டிட்யூட் ஆஃப் பார்மசி, நிர்மா பல்கலைக்கழகம் அகமதாபாத், பாம்பே மருந்தியல் கல்லூரி, பிர்லா தொழில்நுட்ப கல்விக்கழகம், ராஞ்சி, அமிர்தா மருந்தியல் கல்வி நிறுவனம், கொச்சி, ஜே.எஸ்.எஸ். காலேஜ் ஆஃப் பார்மசி, உதகமண்டலம், ஜே.எஸ்.எஸ். பார்மசி காலேஜ், மைசூரு.

தீக்கதிர் செய்தி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.