‘போட்டீங்களா’ : ஆர்ஜே. பாலாஜியின் இரட்டை அர்த்த வீடியோ இறுதியில் எதை வலியுறுத்துகிறது?

வரவிருக்கிற தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் ஓட்டுப் போடுவது, காசுக்கு ஒட்டுப் போடக் கூடாது அல்லது ஓட்டுப் போடாதீர்கள் என பலவகையிலும் விழிப்புணர்வு  பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். ஓட்டுப் போடுவது குறித்து ஆர்ஜே பாலாஜி சமீபத்தில் ‘போட்டீங்களா’ என்ற பெயரில் இரட்டை அர்த்தம் தொனிக்கும் ‘விழிப்புணர்வு’ பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறார்.

இந்த வீடியோவுக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனம் கிளம்பியிருக்கிறது.

ஓசை செல்லா

‪#‎ஆர்ஜேபாலஜிக்கு_கண்டனம்‬ : மொழி என்பது ஒருவித உணர்வின்பால் மக்களின் அன்றாட உபயோகத்தின் பால் வளர்வது அல்லது தேய்வது. ஆனால் இதை நம்ம மீடியா மக்கள் அதுவும் தமிழ் மீடியா மக்கள் பெரிய திரை முதல் சின்னதிரை முதல் இப்போ புதுசா வந்துள்ள குட்டித்திரை (யூடியூப் மாதிரியான சோசியல்மீடியா) வரை அநியாயமாக கொச்சைப்படுத்துவதை பார்த்தால் மிகவும் கோபமாகவே வரும் எனக்கு. அதிலும் இரட்டை அர்த்தங்கள் அதிகமாக தொனிக்கும்போது அது ஒரு பாலியல் வக்கிர ரேஞ்சுக்கு எனக்கு தெரியும். இத்தனைக்கும் பாலுணர்வு சார்ந்த விசயங்களை ஒரு ஓஷோவின் சீடன் என்கிற முறையில் வெகு அழகான இயல்பான ஒன்றாக பார்க்கும் எனக்கு சமீபத்தில் இந்த சமுதாய சேவகன் ஆர்.ஜே பாலாஜி .. ”எப்போ போட்டீங்க” .. முதல் முதலா போட்டப்ப எப்படி இருந்துச்சு” என்றெல்லாம் ஒரு அடல்ட்வீடியோ என்று தலைப்பை வைத்து எடுத்து அதை கடைசியில் “இது ஓட்டு போடவேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக எடுத்தேன் என்று சொல்லும்போது” .. என்னால் சிரிக்கமுடியவில்லை. படுகேவலமாகத்தான் இருந்தது. காமம், சனநாயகக் கடமை, மொழி, இணையம் என்று எல்லாத்தையும் கொச்சையாக்கிய அவனுகளை கண்டால் என்னால் மரியாதையாக பார்க்கமுடியவில்லை. அதையும் சில தோழிகள், தோழர்கள் சிலாகித்து ஷேர் செய்த போது … இக்னோர் செய்யவேண்டும் என்றுமட்டுமே நினைத்த எனக்கு இந்த கண்டனக்குரலை பதிவுசெய்தாக வேண்டும் என்று தோன்றியதால் மட்டுமே …. போடுகிறேன் . . .

அவன்கள் வாயில் ஒரு நாளு போடு போடவேண்டும் என்று கோபம் வருகிறது ! மாமா என்ற ஒரு உறவு முறையையே மரியாதையாக சொல்லமுடியாமல் இன்று அங்கிள் என்று மரியாதையாக அன்னிய மொழியை உபயோகப்படுத்தவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கிய இந்த இரட்டை அர்த்த பெரிய, சின்ன, குட்டி திரை மசுரான்களை வேறு எப்படி கோபத்துக்கு இலக்காக்குவது ! கோபத்துல ஆயிரம் தக்காளி சொல்லுங்கடா வெண்ணைகளா அது இயல்பு… மொழிக்கும் உணர்வுக்கும்.

ஆனா.. படிச்ச பண்பாள மீடியா சில்லறைகள் … நல்ல விசயங்களை சொல்வதாக கருதிக்கொண்டு மொழியையும் அது சார்ந்த அர்த்தங்களையும் மலினப்படுத்துவது சகிக்க முடியவில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.