கௌசல்யா அது வெறும் பெயர்ச்சொல் அல்ல.,! ஆதிக்க சாதிவெறியர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கபோகும் வினைச்சொல்..!! அவளுடைய கண்ணில் சாதிவெறியர்களை களையெடுக்க வேண்டும் என்ற கோவமும், சாதிமறுப்பு திருமணம் செய்யும் காதலர்களை பாதுகாக்க வேண்டுமென்ற ஆதங்கமும் தெரிகிறது…சாதிவெறி பிடிச்ச என்னுடைய பெற்றோர்களையும் கடுமையாக தண்டிக்கனும், தூக்குத்தண்டனை வாங்கிதரணும்ண்ணா..!!! நான் இப்படியே இருந்திரமாட்டேன் விரைவிலே இதிலிருந்து மீண்டுவருவேன் என்னால் இயன்றவரை சாதியொழிப்பு வேலைகளை செய்வேன் என்று நம்பிக்கையோடு இருக்கிறாள்…,கழிப்பிட வசதிகூட இல்லாத ஏழையான சங்கரை காதலிச்சு அவன் படுகொலையான பிறகும் கூடா நான் சங்கர்வீட்லதான் இருப்பேன் என்றுசொல்லும் அந்த இரும்பு இதயம் கொண்ட குழந்தை ஒவ்வொரு முறையும் சங்கர் பெயரை உச்சரிக்கும் போது அந்த குழந்தை சங்கர எந்தளவிற்கு காதலிச்சிருக்குன்னு நம்மனால உணரமுடியுது…அந்த பிச்சு விரலில், தலையில உள்ள வெட்டுக்காயம் சொல்லும் சமூகம் எவ்வளவு சாதிவெறியில புரையோடியிருக்குன்னு… மக்கள் மன்றம் வாம்மான்னே.. காயமெல்லாம் ஆறட்டும்ண்ணா, போலீஸ் பிரச்சனையெல்லாம் முடியட்டும்ண்ணா நிச்சயம் வரேனு சொல்லியிருக்கு…மிக ஏழ்மையில் வாடும் அந்த குடும்பத்துக்கு உடணடி தேவை அரசு வேலை, உரிய நிவாரணம்.
அந்த குழந்தையிடம் பேசிய குறைவான நேரத்தில் நிறைய கற்றுக்கொண்டேன் ஆம் சாதிவெறியர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்..அம்பேத்கர், பெரியாரை தொடர்ந்து கௌசல்யாவும் இனி நம் வாழ்க்கையின் வழிகாட்டி….கவுசல்யா தவிர்க்க முடியாத மாபெரும் அரசியல் சக்தியாக உருவெடுப்பார்….நம்ம வீட்டு குலதெய்வத்துக்கு அதற்கான தளத்த நாம அமைச்சுக்கொடுக்கனும்…
ரமேசு பெரியார், மக்கள் மன்றம்.