தேசியக் கொடி, தேசிய கீதம் என தேசியம் குறித்து ஆர் எஸ் எஸ்ஸும் பாஜகவும் தொடர்ந்து பேசி வருகின்றன. மூவர்ண கொடியை தேசியக் கொடியாக ஏற்றுக் கொள்ளாத இந்துத்துவ அமைப்பான ஆர் எஸ் எஸ், மூவர்ண கொடியை உயர்த்திப் பிடித்து சமீப காலமாக பேசிவந்தது. ஆனால், அதெல்லாம் மேம்போக்கானவை என்பதை நிரூபித்திருக்கிறார் ஆர் எஸ் எஸ் பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி.
வெள்ளிக்கிழமை மும்பையில் உள்ள தீன் தயாள் ரிசர்ச் இன்ஸ்டியூட்டில் பேசிய அவர், “தேசிய கீதமாக உள்ள ஜனகன மன எப்போது இயற்றப்பட்டது? நீண்ட வருடங்களுக்கு முன்னால், அப்போதைய நிலைமை வேறு. ஒரு மாநிலத்தின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பாடப்பட்டது ஜனகன மன. ஆனால் வந்தே மாதரம், தேசியத்தை பிரதிபலிக்கிறது. இது இரண்டு பாடல்களுக்கிடையேயான வேறுபாடு. இரண்டும் மதிக்கக் கூடியவைதான்”
கடந்த 27-ஆம் தேதி, ‘இந்த உலகம் முழுமையும் பாரத் மாதா கீ ஜெய் சொல்ல வேண்டும்’ என்று சொல்லியிருந்தார் பையாஜி.
சமூக ஊடகங்களில் மூவர்ணக் கொடியை ஆர் எஸ் எஸ் அவமதிப்பதாக கண்டனங்கள் கிளம்பி வருகிறது.
https://twitter.com/DrunkVinodMehta/status/716262756832272384