பங்கு வர்த்தகம் செய்யும் நிறுவனமான மோதிலால் ஆஸ்வாலின் நிறுவனர் மோதிலால் ஆஸ்வால், கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்படுத்தியது குறித்து ட்விட்டரில் ஒரு பதிவை எழுதியிருந்தார். நாட்டில் உள்ள பாதி பொறியாளர்கள் இடஒதுக்கீட்டில் படித்து பட்டம் பெற்றவர்கள். அப்படிப்பட்டவர்கள் கட்டிய கட்டடம் இடிந்துவிழத்தான் செய்யும். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. என்று சனிக்கிழமை காலை ட்விட்டியிருந்தார். இந்த ட்விட்டுக்கும் எதிர்ப்பு வலுக்கவே, சில மணி நேரங்களில் அது ஃபார்வேர்டு செய்யப்பட்ட குறுஞ்செய்தி, எனக் கூறி அதை நீக்கிவிட்டார்.
மோதிலால் ஆஸ்வாலின் நிறுவனம், மோடி ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில் பங்கு வணிகத்தில் மேஜிக் நிகழும் என்று சொன்னது. இந்நிறுவனம் சொன்ன மேஜிக் என்ன என்பதை இரண்டு ஆண்டுகால ஆட்சியில் சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் கீழிறங்குவதைப் பார்த்து அறியலாம். தன்னை மோடிக்கு நெருக்கமாகக் காட்டிக் கொள்ளும் ஆஸ்வாலின் எண்ணம் எத்தகையதாக இருக்கும் என்பதை விளக்க நிறைய சாட்சியங்கள் தேவையில்லை.
ஆஸ்வாலுக்கு ட்விட்டரில் வந்த கண்டனங்கள், சில….
https://twitter.com/Bhamii/status/716144343732518912
https://twitter.com/shankasur/status/716202344233328640