யார் இந்த நீதிபதி மகேந்திரபூபதி: அதிர்ச்சியளிக்கும் பின்னணி தகவல்கள்!

வன்னி அரசு

மதுரை கிரானைட் வழக்கு என்பது அரசின் அனுமதி இல்லாமல் கிரானைட் வெட்டி எடுத்தது, கிரானைட் கற்களை பட்டா நிலங்களில் வைத்தது என பல்வேறு வழிகளில் இயற்கையை அழித்து மக்களின் வாழ்வாதாரங்களை சீர்குலைத்ததை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்களின் விசாரணை கமிஷன், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு சமூக இயக்கங்களின் உழைப்பில் வெளிக்கொணரப்பட்டு தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில் மிக முக்கியமான பிஆர்பி கிரானைட்ஸ் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் சகாதேவன் ஆகியோரை மேலூர் நீதிமன்றம் விடுவித்தது. அதிலும் இந்த வழக்குகளை தொடர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ரா, அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சீலா மற்றும் ஞானகிரி ஆகியோர் மீது வழக்கு தொடரவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த மகத்தான தீர்ப்பை வழங்கியவர் நீதிபதி மகேந்திரபூபதி ஆவார்.

யார் இந்த நீதிபதி மகேந்திரபூபதி என விசாரித்தால் வழக்கமான அதிர்ச்சித் தகவல்களே நமக்கு கிடைக்கிறது. அடிக்கடி நீதிமன்றத்துக்கு குடிபோதையில் வருவது, வழக்குகளை விசாரிக்கும்போது நீதிமன்றத்திலேயே குற்றம் சாட்டப்பட்டவரின் சாதி என்னவென்று கேட்பது, குற்றம் சாட்டப்பட்டவர் தலித்தாக இருந்தால் அவரை அங்கேயே அவதூறாக பேசுவது, தலித்துகளின் வழக்குகளில் அவர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்குவது என மதுரை வட்டார தோழர்கள் பட்டியலிடுகிறார்கள். இப்போது தன்னுடைய ஆப்ப நாட்டு மறவர் சாதியை சேர்ந்த பீ.ஆர்.பழனிச்சாமியை காப்பாற்றுவதற்கு நீதியை நரபலி கொடுத்திருக்கிறார் நீதிபதி மகேந்திரபூபதி. தன் சாதியை சார்ந்த எளிய உழைக்கும் மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பக்கம் நின்று நீதியை வழங்காமல் இந்த பெருமுதலாளியின் பக்கம் நிற்பதிலேயே இது என்ன மாதிரியான சாதி பற்று என்னும் கேள்வி எழுகிறது. சாதி என்பது எப்போதும் உழைக்கும் மக்களுக்கு எதிரானது, அவர்களை கூறு போட்டு பிரித்து வைப்பது என்ற புரட்சியாளர் அம்பேத்கரின் கூற்று தான் விடையாக தெரிகிறது.

இந்திய நீதிமன்றங்கள் எப்படி ஆதிக்க சாதிகளின் மன்றங்களாக செயல்படுகிறது என்பதை நாம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். அது 27 அப்பாவி தலித் இளைஞர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி வெற்றிச்செல்வி தொடங்கி, உடுமலைப்பேட்டை தம்பி சங்கரை கொலை செய்தவர்களுக்காக தானே முன்வந்து வழக்கை நடத்திய நீதிபதி வரை தொடர்கிறது. முன்னவர் தன் சாதிக்கான நீதியை வழங்கினார், அடுத்தவர் தன் சாதிக்கான மனசாட்சியோடு துடித்தார், இப்போது நீதிபதி மகேந்திரபூபதியோ ஒருபடி மேலே போய் குற்றம் சுமத்தப்பட்ட தன் சாதிகாரரை காப்பாற்றி குற்றம் சுமத்தியவர்கள் மேலேயே வழக்கு போட உத்தரவிட்டுள்ளார். இவர்கள் இந்திய அரசியல் சட்டத்தை படித்த தகுதியுடன் வந்தவர்களா இல்லை ஊரில் சாதி பஞ்சாயத்து செய்த நாட்டாமை தகுதியுடன் வந்தவர்களா என்ற சந்தேகம் வருகிறது.

கிரானைட் வழக்குகளில் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்னும் குற்றச்சாட்டின் பேரில் நேற்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகேந்திரபூபதியிடம் விசாரணை நடத்திய பிறகு இன்று அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடத்தில் நமக்கு சில கோரிக்கைகள் உள்ளது. மகேந்திரபூபதி நீதிபதியாக பணி செய்த காலகட்டத்தில் விசாரித்து, தீர்ப்பளித்த வழக்குகள் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் அதிலும் குறிப்பாக தலித்துகள் தொடர்பான வழக்குகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். பிஆர்பி தொடர்பான வழக்கின் பின்னணியில் கோடிக்கணக்கில் பணம் கைமாறியதாக சொல்லப்படுவது பற்றி விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்.

இப்போது சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள ஆறு புதிய நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே தலித் ஆவார். அதே நேரத்தில் இந்திய சிறைகளில் அதிகம் இருப்பது தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்கள் என்றும், பாதிக்கப்பட்ட தலித்துகளின் வழக்குகள் தான் அதிகம் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் இந்திய அரசின் அறிக்கைகள் சொல்லுகிறது. இந்த இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பை தான் நாம் உணர வேண்டியுள்ளது. இந்திய நீதிமன்றம் என்பது பணக்காரர்களுக்கும், ஆதிக்க சாதிகளுக்குமானது என்பது தான் எளிய மக்களின் பார்வையாக உள்ளது. அதிலும் தலித்துகளுக்கு இந்த நீதிமன்றங்கள் ஊர் சாதி பஞ்சாயத்துகளின் நவீன வடிவமாகவே இருக்கிறது. என்று நம்மை ஏய்ப்பவர்களின் சூழ்ச்சியை உணர்ந்து விழிப்படைகிறோமோ அன்று தான் நமக்கு விடுதலை.

 

2 thoughts on “யார் இந்த நீதிபதி மகேந்திரபூபதி: அதிர்ச்சியளிக்கும் பின்னணி தகவல்கள்!

  1. அது சரி…தப்பான தீர்ப்புக்கு தற்காலிக பணிநீக்கம்…சொன்ன தப்பான தீர்ப்பை ரத்து செய்து பிஆர்பியை மீண்டும் உள்ளே தள்ளீட்டாங்களா..? அப்படி செய்யலைனா தற்காலிக பணிநீக்க உத்தரவே முன்தீர்மானிக்கப்பட்டதாக சந்தேகம் எழுகிறது….!

    Like

  2. . சாதிய பின்னணியில் தீர்ப்பு வழங்கப்பட்டதாக கூறும் நீங்கள் இதே ஒரு தலித் நீதிபதி/அதிகாரி தன் சாதியினருக்கு பச்சையாக ஆதரவளிக்கும் போது என்ன செய்தீர்/செய்வீர். நியாயம் பேச வந்துட்டீங்க. இப்படி பதிவிட மனசாட்சி கூசல. முதலில் நீ கழுவு.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.