தலைவர்கள் அசதியால் கண் அசந்ததை செய்தியாக்குவது என்னமாதிரியான ஊடக அறம்?

ஆளூர் ஷாநவாஸ்

பரபரப்பாக எதையாவது வெளியிட்டு, டி.ஆர்.பி ரேட்டிங்கில் சக டி.வி.க்களை முந்த வேண்டும் என்பது மட்டுமே ஊடகங்களின் ஒரே இலக்காக உள்ளது.

கொட்டாவி விடுவதையும், வாயைப் பிளப்பதையும் படம் பிடித்து செய்தியாக்கி பரபரப்பு ருசி கண்டுவிட்டதால், இனி மூக்கை நோண்டுவது, காதைக் குடைவது, தலையை சொறிவது என அனைத்தையும் படம்பிடிக்க வெறியுடன் அலைவார்கள்.

நியூஸ் 7 டிவியை கண்டிக்கிறேன்.

சுந்தர்ராஜன்

கேப்டன் விஜயகாந்த் அணி மீது எனக்கு ஏராளமான விமர்சனங்கள் உள்ளன. ஆனாலும் இதை ஒரு செய்தியாக உருவாக்கியவர்களின் உளவியலை சகிக்க முடியவில்லை. உடல் களைப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது. ஊடக அராஜகத்திற்கு இதையும் ஒரு உதாரணமாக கூறலாம். ஆபாசம்…

கிருஷ்ணா தனுஷ்கோடி

ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஓடிக்கொண்டே இருப்பவர்கள் இடையில் கண்ணசறுவது என்பது இயல்பான ஒன்று. இது தன்னை மீறிய கட்டுப்படுத்தமுடியாத ஒன்று. இதை ஒரு செய்தியாக வெளியிடுவதும் திருப்பித்திருப்பி காட்டுவதும் அருவருப்பான ஒரு செயல். நியூஸ் செவன் தொலைக்காட்சி இவ்வளவு தரம்தாழ்ந்த நிலைக்கு சென்றிருக்க கூடாது.

யார் யாருக்கு என்னென்ன துறை என்பது எல்.கே.சுதிஷ் அறிவித்தபோது வேடிக்கையாகவே இருந்தது, இருந்தாலும் கூட்டணி ஆட்சிக்கு ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்ற ஆண்டை மனப்பான்மையில் திமுகவும் அதிமுகவும் இருக்கும் நிலையில் கூட்டணி ஆட்சி நிலைப்பாட்டை வலுப்படுத்தும் விதமான அந்த உரையை ரசிக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.