அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்… ?

பிரவீண் குமார்
1. மதுவிலக்கு அறிவிக்காமல் வெற்றி பெற்றதால் மக்கள் சாராய கடைகளை விரும்புகிறார்கள் என்று கூறி 6000 கடைகளை 12000 கடைகளாக மாற்றி ஜெயலலிதாவின் மிடாஸ் சாராய ஆலையின் ஆண்டு வருமானத்தை 2000 கோடியில் இருந்து 4000 கோடியாக மாற்றுவார்கள்.
2. இலவசங்களை காட்டி வெற்றி பெற்றதால் இலவச கலாச்சாரம் மேலும் பெருகும்.
3. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் இருக்கும் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை 1 வருடத்தில் விசாரித்து சிறைக்கு அனுப்பும் லோக் ஆயுக்தா சட்டம் தமிழகத்திற்கு தேவை இல்லை என்று சொன்ன அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்த சட்டம் தமிழகத்திற்கு வருவது வெறும் பகல் கனவாக முடியும்.

4. இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களில் சட்டசபை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் போது தமிழகத்தில் மட்டும் அதை செய்ய அரசிடம் நிதி இல்லை என்று கூறிய அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கடைசி வரை நாம் நமது சட்டமன்ற நிகழ்வுகளை பார்க்க முடியாது. மக்கள் நேரடியாக பார்ப்பதால் சட்டசபையில் ஒழுக்கம் காக்க வேண்டும் என்ற எண்ணமும் நமது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வராது.

5. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ள சேவை உரிமை சட்டம், அதாவது அரசின் சேவைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காவிட்டால் அந்த அதிகாரியின் சம்பளத்தில் இருந்து ஒரு நாளைக்கு 500 ரூபாய் பிடித்தம் செய்யும் இந்த சட்டம் தமிழகத்திற்கு தேவை இல்லை என்று நீதிமன்றத்தில் கூறிய அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைக்கும் இந்த சட்டம் தமிழகத்தை எட்டி கூட பார்க்காது.

6. தமிழகத்தின் பிரம்மாண்டமான கிராணைட் ஊழல் குறித்து திரு.சகாயம் அளித்த அறிக்கையை வெளியிடவிடாமல் இழுத்தடிக்கும் அதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேலும் பல கிராணைட் மலைகள் காணாமல் போகும்.

7. தூத்துக்குடி பகுதியில் தாது மணல் கொள்ளையில் ஈடுபடும் ஜெயா டிவியின் முன்னாள் பங்குதாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேலும் பல முன்னாள் பங்குதாரர்கள் இந்த கொள்ளையில் இறக்கி விடப்படுவார்கள்.

8. அரசாங்கம் மக்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டிய தண்ணீரை தனது புனைப்பெயருடன் தனது படத்தை ஒட்டி பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யும் முதல்வரை கொண்ட அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தண்ணீரை பங்க் உருவாக்கி லிட்டர் கணக்கில் நமக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்படும்.

9. மக்களுக்கு படிக்கும் அறிவை வளர்க்கும் நூலகங்கள் தமிழகத்தில் இழுத்து மூடப்பட்ட காரணமான அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நமது வருங்கால சந்ததி நூலகம் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலை ஏற்படும்.

10. சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகள் என்ற நிலையை மாற்றி தனது அடிமைகள் என்ற நிலையை உருவாக்கிய அதிமுக முதல்வர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அடுத்த கட்டமாக மக்களையும் அடிமைகளாக மாற்றும் முயற்சி துவங்கும் என்பதை மறுக்க முடியாது.

11. மக்களை எந்த நிலையிலும் சந்திக்காத ஒரு முதல்வரை தந்த அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதல்வர் மக்களிடம் இருந்து மீண்டும் வெகு தூரம் சென்று விடுவார்.

One thought on “அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்… ?

  1. திமுக ஆட்சிக்கு வந்தால் நிலைமை எப்படி இருக்கும் என்பதையும் எப்படி இருக்கும் என்பதையும் வௌக்கமாக சொல்லிவிடுங்கள்

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.