தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்றால், விஜயகாந்த் முதலமைச்சராவார். வைகோ துணை முதல்வராகவும் திருமாவளவன் கல்வி அமைச்சராகவும் பதவி ஏற்பார்கள். இடதுசாரிகளுக்கு உள்ளாட்சித் துறையும் நிதித்துறையும் ஒதுக்கப்படும் என தேமுதிக இளைஞரணி தலைவர் சுதிஷ் தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.