ஈரோடு மாவட்டம் கெம்பநாயக்கன்பாளையத்தில் தலித் மக்களை உணவகத்திற்குள் உள்ளே நுழைய அனுமதிக்காத அம்மன் ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். உணவகத்திற்குள் தலித் மக்களை அனுமதித்தால் மற்ற சமூகத்தினர் வரமாட்டார்கள் என இந்த உணவகத்தின் உரிமையாளர் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. தி டைம்ஸ் தமிழும் வெளியிட்டது.
இந்நிலையில் இந்த தீண்டாமைக்கு எதிராக சமூகநீதிக் கட்சியினர் காவல் நிலையத்தில் வன்கொடுமை சட்டத்தின் படி புகார் அளித்தனர். அதன் பேரில் உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தலித்துகளை ஓட்டலுக்குள் அனுமதிக்காத உரிமையாளர் மேல் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை


செய்தியை பதிந்ததமைக்கு மனமார்ந்த நன்றிகள்
LikeLike