அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது பட்டியலில் சமஸ்கிருத மொழியில் வெளியான பிரியமாசணம் படம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக சமஸ்கிருதம் மாநில மொழி பிரிவில் விருது பெற்றிருக்கிறது. எந்த மாநிலத்திலும் பேசப்படாத ஒரு மொழிக்கு எப்படி மாநில மொழிக்கான விருது வழங்கலாம் என பலர் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.
வினோத் மன்காரா என்பவரால் இயக்கப்பட்ட பிரியமாசணம், இந்துத்துவ சித்தாந்தத்தைப் பேசுவதாகக் கூறி, கேரளாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட நிராகரிக்கப்பட்டது. கேரளத்தில் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, உன்னாயி வாரியர் என்ற கவிஞரின் வாழ்க்கையைச் சொல்கிறது இந்தப் படம்.
இந்தியாவில் மூன்றே மூன்று சமஸ்கிருத படங்கள்தான் தயாரிக்கப்பட்டுள்ளன. 1983-ஆம் ஆண்டு ஆதி சங்கராச்சாரியார், 1993-ஆம் ஆண்டு வெளியான பகவத் கீதா, 2015-ஆம் ஆண்டு வெளியான பிரியமாசணம் ஆகியவை அந்த படங்கள்.
Karthikeyan N
#பிரியாமாணசம் என்கிற #சமஸ்கிருத மொழிப் படத்திற்கு சிறந்த மாநில மொழித் திரைப்படமாக
இந்திய அரசு தேர்வு செய்திருக்கிறது… #சமஸ்கிருதம் எந்த மாநில மொழி என்பதுதான் தெரிய வில்லை ….
#பிஜெபியின் இந்துத்துவவின் கோர முகம்
கீரா.