பாகுபலிக்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது: இயக்குநர் ராஜமவுலியின் மனுஸ்மிருதியை தூக்கிப் பிடிக்கும் பதிவுக்குக் கிடைத்த அரசு அங்கீகாரமா?

ஆண்டுதோறும் சினிமாவுக்கென வழங்கப்படும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக தேசிய விருது பெறும் படங்கள் வணிக ரீதியிலான வெற்றி என்பதைக் கடந்த சினிமாவின் கலை அம்சத்தைத் தொடும் படங்களுக்கென வழங்கப்படுவது உண்டு. ஆனால் இந்த ஆண்டு, பாகுபலி என்ற பன்மொழி வெற்றி படத்துக்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இது சமூக ஊடகங்களில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இளையராஜா, வெற்றிமாறன், சமுத்திரக்கனி தேசிய விருதை புறக்கணிக்க வேண்டும்…

ஒரு அமைப்பு முறையை கேள்விக்குட்படுத்தும் படத்தை எடுத்தது சிறப்பான முயற்சி என்றால், அந்த அமைப்பு முறையை உருவாக்கும் அரசின் இன்னொரு அமைப்பு வழங்கும் அங்கீகாரத்தை ஏற்க மறுப்பது சிறந்த முன்னுதாரணமான ஒன்றாக அமையும். நாட்டில் மதவாத சக்தியின் எதேச்சிதிகார போக்கு அதிகரித்து, சிறுபான்மையினரின் வாழ்க்கை கேள்விக்குள்ளாகி இருக்கும் இது போன்ற காலக்கட்டத்தில் கலைஞர்கள் தங்களின் செயல்பாட்டின் மூலமே அரசுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவிக்க இயலும். வெற்றிமாறன், சமுத்திரக்கனி, இளையராஜா ஆகியோர் தங்களுக்கு அளிக்கப்பட்ட இந்த விருதை புறக்கணிக்கிறோம் என்று கூட்டாக அறிவிக்கை வெளியிட வேண்டும். ஏன் இவர்கள் இந்த விருதை புறக்கணித்தார்கள், அதன் பின்னணி என்ன என்பதை முன்னிட்டு குறைந்தபட்சம் தமிழ்நாடு முழுக்க பெரும் விவாதங்கள் உருவாக வேண்டும். அந்த விவாவதங்களே ஒரு கலகக்காரனாக மாற வேண்டும். அப்போதுதான் கலை, கலைஞர்கள் என்கிற சொல்லுக்கு உரிய அந்தஸ்தை நாம் மீட்டுருவாக்கம் செய்ய முடியும். கலைஞன் என்பவன் முதலில் பெரும் கலகக்காரன் என்பதை இந்த நேரத்தில் இவர்கள் உணர்த்த வேண்டும். அல்லாமல் இந்த விருதுகளை இவர்கள் ஏற்பார்களேயானால், அவர்கள் சினிமாவை, வெறும் பொழுதுபோக்கு கேளிக்கை சித்திரங்களாக மட்டுமே பாவிக்கிறார்கள், அதில் வழக்கமான கதைகளை பார்த்து அலுத்துப்போன சினிமா ரசிகர்களுக்கு புதிய சரக்காக, அமைப்பு சர்வதிகாரம், எளிய மக்கள் வாழ்க்கையின் பின்னணி என்பதையெல்லாம் தங்களின் வணிக லாப வெறிக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றுதான் எண்ணத் தோன்றும்.

நான் இந்த ஆண்டு தேசிய திரைப்பட விருதுகளை முற்றிலும் புறக்கணிக்கிறேன். இது சமூகத்திற்கு மட்டுமல்ல, பாகுபலி போன்ற மூன்றாம்தர படங்களுக்கு விருது அளித்திருபதன் மூலமாக சினிமா எனும் கலையையும் சேர்ந்தே இந்த அரசு அமைப்பு அவமதித்திருப்பதாக எண்ணுகிறேன்.

‪#‎பாகுபலி‬-க்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டிருப்பதைக் கண்டு பொங்குவதும் கலாய்ப்பதும் தப்பு. அதற்குள் மிகப் பெரிய வியூகம் ஒளிந்துகிடக்கிறது.

அவார்டு படம் என்பதற்கு ஓடாத படம் என்ற பொருள் நம் வழக்கத்தில் உள்ளது. அதைக் கட்டுடைப்பதற்கான அடர்த்தியான உத்திதான் இது. இனி நேஷனல் அவார்டு வாங்கின படம் என்றால், வேறு மாதிரியான இமேஜ் உருவாகி, நல்ல படங்கள் வசூலை வாரிக் குவிக்க வாய்ப்பு நிலவும் என்ற அக்கறையில் பாகுபலி அவார்டு படம் ஆக்கப்பட்டுள்ளதாகவே அவதானிக்கிறேன்.

அப்புறம் இன்னொரு மேட்டர்… தேசிய விருது பெற விரும்புவோருக்கு கேரண்டியாக விருது கிடைக்கக் கூடிய ஒரு டிப்ஸ்: சமஸ்கிருத மொழியில் ஒரு படம் எடுங்கள். அதை தேசிய விருதுக்கு அனுப்புங்கள். விருது நிச்சயம்.

பாகுபலிக்கு தேசிய விருதாமே…

ங்கொய்யால…தேசியவிருதையும் பலி போட்டிட்டீங்களா…வெளங்கிரும் ஒங்க இந்திய சினிமா.

பாகுபலி படம் வெளியான சமயத்தில் இந்தப் படத்தில் நடித்த முதன்மை நடிகரான பிரபாஸ், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

This slideshow requires JavaScript.

வழக்கமான சந்திப்பாக இது பார்க்கப்பட்டாலும் கூட, இந்துத்துவத்தை முன்னிறுத்தும் பாஜகவுக்கு பாகுபலி படத்தின் இயக்குநர் எஸ் எஸ் ராஜமவுலிக்குமான இணக்கம் மனுஸ்மிருதியோடு தொடர்புடையது. தனுது ட்விட்டர் பக்கத்திலும் முகநூலிலும் மனுஸ்மிருதி சாதியை பிறப்பின் அடிப்படையில் கட்டமைக்கவில்லை, வாழ்க்கை முறையின் அடிப்படையில் தான் கட்டமைத்தது என்று தன்னுடைய நண்பர் சொன்ன விளக்கம் சிறப்பானது என்கிறார்.

பஞ்சமர்கள்(தீண்டத்தகாதவர்கள்) தங்கள் வாழ்க்கையை ஓட்ட மற்றவர்களை சார்ந்திருப்பவர்கள்(ஒட்டுண்ணிகள்)

சூத்திரர்கள் தங்களுக்காகவும் குடும்பத்துக்காகவும் வாழ்பவர்கள்

வைசியர்கள் தனக்காகவும் தன்னுடன் வியாபாரம் செய்பவருக்காகவும் பொருளீட்டுபவர்

சத்திரியர் தனக்குக் கீழே உள்ளவர்கள் உண்டபிறகு, உண்பவர்

பிராமணர் தான் முதலில் கற்று பிறகு, மற்றவருக்கு கற்றுத் தருபவர்.

SS Rajamouli

We learnt The Caste system from Manusmrithi was based on our lifestyle and not by birth. Mr.Prasad, A gentleman whom I play tennis with, told me a better expansion.

Panchama Jaathi (Untouchables) One who depends on others for his living. (Parasite)

Sudra One who lives for himself and his family.

Vysya One who makes profit for himself as well as for the person with whom he is trading with.

Kshatriya One who eats after the people under him have eaten.

Brahmin One who first learns and then teaches…

பாகுபலிக்கு தேசிய விருது கிடைக்க இந்தக் காரணம் போதாதா?

Shyam Sundarம்ம்ம் மொளலி டிவிட்டரில் பாகுபலி வந்து சில நாட்களில் மனு நீதி யை புகழ்ந்து தள்ளியிருந்தார்….வெளிப்படையாக சாதிய முறையை ஆதரித்தார்….அதன் விளைவாக கூட இருக்கலாம்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.