கொங்கு பகுதியில் மீண்டும் ஒரு ஆணவக் கொலை; கரூரில் கூலிப்படையால் இளைஞர் வெட்டிக் கொலை

உடுமலைப் பேட்டை சங்கர் கொடூரமாக கொல்லப்பட்டதன் அதிர்ச்சியே இன்னும் அடங்கவில்லை. இதற்குள் மேலும் ஒரு ஆணவக் கொலை அரங்கேறியுள்ளது. இதுவும் கொங்கு பகுதியில்…
மணிகண்டன் மா.பா

மீண்டும் ஒரு ஆணவக் கொலை…. திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் செபாஸ்டியன் மகன் சுரேஷ் ஆரோக்கியசாமி வயது 28.இவர் தனது தாய் மற்றும் சகோதரிகளோடு கரூர் ஆண்டாங்கோவில் ராமா கவுண்டன் புதூர் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறி உள்ளார்.இதனிடையே வீட்டு உரிமையாளரின் மகளுக்கும் இவருக்கும் ஏற்பட்ட காதல் கடந்த 2015-டிசம்பர் மாதம் பெண் வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி திருமண த்தில் முடிந்தது.சில நாட்கள் வெளியூரில் கழித்த இவர்கள் மீண்டும் ஏற்கனவே வசித்த பகுதியில் குடியேறினர்.இது பெண் வீட்டாரை கொதிப்படைய செய்துள்ளது. இதில் ஏற்பட்ட மோதல் கரூர் காவல் நிலையத்தில் புகார் சென்றது. புகார் குறித்து இரு தரப்படும் விசாரணை செய்தபோது, கணவனோடு செல்ல விருப்பமில்லை என கூறியதால் பெண் அவரது தந்தை வீட்டிற்கு சென்றார்.

இதனால் பாதிக்கப்பட்ட சுரேஷ் ஆரோக்கியசாமி நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததாக தெரிகிறது. இதனிடையே நேற்று மாலை கரூரை அடுத்த ஆத்தூர் பிரிவு சாலையில் உள்ள அரசு மதுபான கடைக்கு அருகில் உள்ள பாரில் தனது நண்பருடன் மது அருந்த சென்றுள்ளார். இந்த சந்தர்பத்திற்காகவே காத்திருந்த கொலை வெறியர்கள் கொலை வெறியாட்டம் நடத்தி தங்களது நோக்கத்தை நிறைவேற்றி கொண்டனர். இன்னும் எத்தனை உயிர்களை இழக்க போகிறோமோ இந்த வீணாய் போன ஜாதி வெறியால் ..

இந்த சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, கரூர் காவல் நிலையத்திற்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பில் பேசிய ஒருவர், இந்தக் கொலையை செய்தது நாங்கள்தாம், இன்னும் சில நாட்களில் சரணடைந்துவிடுவோம் என தெரிவித்ததாக போலீ்ஸார் தெரிவித்துள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.