சாதி உளவியலைத் துடைத்து அழிக்காத யாரும் மனித அறம் பற்றிப் பேசத் தகுதியற்றவர்கள் என்பதற்கு விளக்கம் கேட்பவர்கள் அறிவிலிகள் மட்டும் இல்லை அய்யோக்கியர்களும் கூட.
தீண்டாமைையை நான் கடைபிடிப்பதில்லை என்று சொல்லிவிட்டு தீண்டாமை அமைப்பை, அதன் உளவியலை, அதற்கான இந்திய நம்பிக்கைகளை எதிர்த்துப் போராடமல் இருப்பது தீண்டாமையைச் செலுத்துவதைவிட கொடிய குற்றம்.
நவீன மனம், நவீன அறிவு தனக்கு உள்ளதாக நம்பம் ஒவ்வொருவரும் தலித் அரசியலின் பின் செல்லாமல் இருப்பதற்கு நூறு காரணங்கள் இருக்கலாம் அதில் முதல் காரணம் இதுதான் : அவர்கள் நவீன அறிவோ- உளப்பாங்கோ இல்லாத வெற்றுச் சொல்லிகள்.
அறிவின்மை -அறமின்மை இரண்டையும் கொண்டாடிக்கொண்டு வெறிநோய் பீடித்துக் கிடக்கும் தமிழ்ச் சமூகத்தை மாற்ற உள்ள ஒரே அரசியல்- ஒரே கருத்தியல் தலித் அரசியலும் தலித்தியக் கோட்பாடும்தான் என்பதற்கு நாம் பல விளக்கங்களைத் தரலாம். ஆனால் பின் வரும் சாதிப் பாசிச, தேசிய விரோதப் பேச்சு எதனை விடவும் தலித் அரசியலின் தேவையை தெளிவாக நம் மூளையைத் தாக்கும்படி நமக்குச் சொல்லித்தருகிறது.
இளந்தமிழன் சங்கர் படுகொலை பற்றிக் கருத்துச் சொல்லக் கேட்டபோது வடதமிழர் சாதித் தலைவர் பேசாமல் எழுந்து சென்று தெளிவுபடுத்திய வன்மத்தை இந்தத் ெதன் தமிழர் சாதிவெறிக்குரல் பேசித் தெளிவு படுத்துகிறது.
நீங்களும் நானும் எங்கு இருக்கிறோம் என்பதையும் யார் நமது சொந்தங்கள் என்பதையும் இன்று ெதளிவாக்கிக்கொள்ள வேண்டும்.
82 சதவிகிதம் என்ற கணக்கு சாதியின் கணக்கா சாதிவெறியின் கணக்கா என்பதை நாம் ஒவ்வொருவரும் முடிவு செய்தாகவேண்டும்.
பின் வரும் பகுதி தமிழக அரசியலை மட்டுமல்ல தமிழ் உளவியலையும் உள்வெளியாக காட்டித்தருகிறது.
பதிவு செய்யப்பட்ட அருவருப்பூட்டும் ஒரு குரலின் வரிவடிவம் இது:
அன்பின் உறவுகளே! என் புலிப்படைத் தளபதிகளே!
நான் செங்குட்டுவன் வாண்டையார் பேசறேன்.
விமர்சனங்களையும் பிரச்சினைகளையும் நாம தாங்கதான் வேண்டும். ஒரு பெரிய அறிஞர் சொல்றாரு, அடுத்தவன் விமர்சனத்தில நீ வந்துட்டாலே நீ வளர்ந்துகொண்டிருக்கிறாய் என்று அர்த்தம்.இந்தியாவுலயே தலித்துகள நேரடியா எதிர்த்து அரசியல் பண்ணிக்கிட்டு, இவங்களயும் பிரச்சினை பண்ணிக்கிட்டு நாம வாழ்ந்துகிட்டு இருக்கோம். அதற்கு நமக்கு எதிர்ப்புகளும் பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்யும். நம் மக்கள் திருமாவளவன திட்டலயா? திட்டிக்கிட்டுதான் இருப்பான், பண்ணிப் பாக்ககட்டும். இது வந்து, இவங்கள திருத்தறது நம்ம வேலயில்லை. இவங்க இப்படி திட்டிக்கிட்டே இருக்கணும். அதான் நமக்கு நல்லது.
தலித் மக்கள் இந்த மாதிரி தாறுமாறா பேசறதெல்லாம் எடுத்துப் போட்டுகிட்டே இருங்க. ஏன்னு கேட்டிங்கன்னா, தமிழகத்துல தலித்-தலித் அல்லாதவர்கள்- இவங்கள எப்படி அரசியல்ல அனாதைகளாக ஆக்கணும்னு எனக்குத் தெரியும். எப்படி இந்த திருமாவளவன திராவிடக் கட்சிகளெல்லாம் சேர்ந்து விரட்டி விட்டாங்களோ-வைக்கோ மட்டும் தேவையில்லாம சேர்ந்து வீணா போனாருன்னு வைச்சுக்குங்களேன்- வைகோ என்னக்கி போய் அங்க சேர்ந்தாரோ அப்பவே அவங்க மாவட்டச் செயலாளர்கள் எல்லாம், நெறைய பேரு அவர விட்டு போயிட்டாங்க. அவருடைய கட்சியிலிருந்து நிறைய பேரு போயிட்டு இருக்காங்க. அதனால தலித் இயக்கங்கள் அனாதையாக்கப்பட வேண்டும். தலித் மக்களும் அனாதை ஆக்கப்படணும். தலித் இயக்கத்துடய தலைவர்களும் அனாதை ஆக்கப்படணும். அதுதான் தொழில் ரகசியம்.
இப்போ இவங்க திட்டத் திட்டத்தான் அவங்களுக்கு சனியன். இவங்களுக்கு பிரச்சனையை உருவாக்கிறது- நம்ப ஒன்னும் உருவாக்க வேண்டியதில்ல, அவங்களே உருவாக்கிடுவாங்க. இப்ப அவங்க எல்லாரையும் திட்டத் திட்ட என்ன ஆகும்ணு பாத்திங்கன்னா, ஒரு கால கட்டத்தில அவங்க தனியா-மறுபடியும் அதே – எப்படி முன்ன தனியா- எப்படி பிரிச்சி – ஊரவிட்டு தனியா தள்ளிக் கொண்டு போய் – இரண்டு தெருவ கட்டி தள்ளி வச்சாங்களோ அதே மாதிரி அரசியல்லயும் பொது வாழ்க்கையிலயும் – இந்தியாவுல தலித்துகள, அரசியல்ல தலித்துகளுக்கு தனி தெரு மறுபடியும் ஒதுக்கச் சொல்லி சொல்லிடுவாங்க.
அதனால, இவங்க அவங்க தலயிலயே மண்ணை அள்ளிப் போட்டுக்கிறாங்க, அது நல்லதுதான். இப்ப அவங்க செய்யறது எல்லாமே, அவுங்கவுங்களுக்கு வென வச்சிக்கிற வேலய கரக்டா பண்ணிக்கிட்டு இருக்காங்க. இப்ப நாம செய்ய வேண்டியது என்னன்னா? தேசிய கட்சிகளும் திராவிட கட்சிகளும் தலித்துகள ஒதுக்க வேண்டும், அல்லது நாம சொன்ன மாதிரி எஸ்.சி கிட்ட ஓட்டு கேட்டா இங்க வராத, எஸ்.சி தெருவுல ஓட்டுக் கேட்டுட்டு எங்க தெருவுல வந்து ஓட்டுக் கேட்காத என்று சொல்லி நம்ம மக்கள் பிரச்சினைய திசைய திருப்பணும்.
தலித்- தலித் அல்லாதவர்கள் என்ற ஒரு மிகப் பெரிய பிரச்சின நடக்கப் போவுது. அதுக்குத் தகுந்த மாதிரி இவங்கள முதல் கட்டமா, அரசியல் அனாதை ஆக்கணும். இவர்களுக்கு மற்றவர்களுக்கிட்ட இருந்து கிடைக்கக் கூடிய உதவிகள தடுத்து நிறுத்தணும். அடுத்தவங்க, அடுத்த சாதிக்காரங்க யாருமே தலித்துகளுக்கு வேல கொடுக்கக்கூடாது. தலித்துகளை வேலக்கு வச்சிக்கக்கூடாது. அவங்களுக்கு நம்ப பக்கத்திலிருந்து 10 காசுகூட, நம்ம 82 பர்சன்டேஜ் வசிக்கற, வாழக்கூடிய மாற்று சாதிக்காரங்கக்கிட்ட இருந்து அவங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காம பண்ணிடம்னாலே பிரச்சின தீந்திடும். ஆல்ரெடி அவங்க பொருளாதாரத்தத் தேடி – சோத்துக்கு அலைய விட்டுடம்னாலே – மற்றபடி வாய பொத்திக்கிட்டு பேசாம இருப்பாங்க. அதுக்கு என்ன வழிங்கிறத யோசிங்க.
நம்ம மக்கள் வந்து இவங்களுக்கு எப்படி வேலையை கெடுக்கலாம், எப்படி இவங்களுக்கு பொருளாதாரத்தக் கெடுக்கலாம், எப்படி இவங்களுக்கு காசுவர்ற- ஒவ்வொரு காசையும் கெடுக்கலாம். இவங்களுக்கு சாப்பாடு வந்து கவர்மெண்டு போடட்டும் நமக்கென்ன? அதனால தலித்து வாக்குகள கேக்கறவங்க, நம்மகிட்ட வந்து ஓட்டு கேக்கக்கூடாது. தலித்துகளுக்கு வேல கொடுக்கிறவனுக்கு நம்ம வேல கொடுக்கக்கூடாது. இந்த மாதிரி, மிகப்பெரிய தர்க்க ரீதியான ஒரு போராட்டத்த நம்ம மனரீதியா ஆரம்பிக்கணும். இதுதான் இதுக்கு தெளிவான வழி.
எதிரிய பிரியா இருக்க விடறதனால தான் பிரச்சின. நம்ம ஆளுவ டிரைவர் வேல கொடுக்காதீங்க, அவங்க வண்டிய கூப்படாதீங்க. அவங்களுக்கு…. அவங்க, கடயில பொருள் வாங்காதீங்க. அவங்க ஆபிசரா இருந்தாங்கன்னா, அந்த இடத்துக்குப் போயி இவன்…. ஆபிசரா இருந்தா எங்க ஊருக்கு விஏஓ ஆக எஸ்.சி வேணாம்னு எல்லாரும் எழுதி கொடுங்க. அதே மாதிரி பஸ்சுல கண்டக்ரா இருந்தான்னா அவங்கிட்ட டிக்கெட் எடுக்காதீங்க, உங்களால என்னென்ன வகையில அவங்களுக்கு பொருளாதர ரீதியா- வேலை வாய்ப்புகல்ல, என்ன என்ன வகையால அரசியல் ரீதியா -எப்படி யெப்படி பண்ணணுமோ அதப் பண்ணின்னா ஆட்டோமேட்டிக்கா ஒடுங்க போறாங்க.
இப்ப எல்லாரும் பச்சையா சொல்லுங்க தலித்து கட்சி, தலித்த வச்சிறுக்கிற கட்சிகளுக்கு நாங்க வாக்களிக்க மாட்டோம், அப்படின்னு திருத்தா சொல்லுங்க. இவங்க ஓட்டு வேணாம்னு அரசியல் பண்ணறது இந்தியாவுல நாம மட்டும் தான் பண்றோம். தமிழகத்திலயே தலித் வாக்குகள் வேண்டாம் என்று சொல்லுகிற ஒரே இயக்கம் நமது இயக்கம்தான். இதுல தெளிவா தெரிஞ்சிக்குங்க.இவங்களுக்கு தீர்வு என்னன்னு நெறைய பேர் கேட்டிருக்கிறாங்க. தலித் அல்லாத – தலித் மக்கள் அல்லாத, தலித் வாக்குகளை வாங்காத, ஒரு கட்சியால மட்டும்தான் நமக்கு தீர்வு ஏற்படும். நாம மட்டும்தான் அதை சொல்லி இருக்கோம். செங்குட்டுவன் வாண்டையார் மட்டும்தான் – 1999 இல இருந்து எங்களுக்கு தலித் வாக்குகள் வேண்டாம், எங்களுக்கு தலித்தோட எந்த உதவியும் வேண்டாம். அவங்க ஓட்டே எங்களுக்கு வேண்டாம், பாக்கி இருக்கிறது 82 சதவீதம் சாதிக்காரங்கள வச்சி நாங்க ஆட்சி அமைக்கின்ற போது தான் இதற்கு நிச்சயமாக ஒரு தீர்வு கிடைக்கும்.
அதை நோக்கிய பயணத்தில தலித் அல்லாத மக்களை ஒருக்கிணைத்து, ஆட்சி அமைச்சம்னா ஆட்டோமேட்டிக்கா வாயப் பொத்திக்கிட்டு இருக்கப் போறான். அதுவரை இவர்களுக்குக் கிடைக்கிற பொருளாதார வசதி, எல்லா உதவிகளையும் எப்படி எப்படி தடுத்து நிறுத்தலாம். அப்படின்னு நீங்க யோசிங்க. வாழ்த்துக்கள்.
இது அனைத்துக் தளங்களுக்கும் பார்வேட் பண்ணிடுங்க.
[இது உருவாக்கும் கொலைகார உளவியலை எந்த அரசியல் வழியாகக் கையாள்வது என்பதைப் பற்றி நாம் இனிதான் சிந்திக்க வேண்டியுள்ளது. இந்தப் பேச்சுக்கு உரிய நபர் இந்திய தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உரியவர். சுதந்திரம் (ஆசாதி) என்று குரலெழுப்பிய கங்கையா குமார் தேசவிரோதம் அரசுக்கெதிரான சதி என்ற குற்றச் சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். சுதந்திரம் கேட்டால் அனாதையாக்கிக் கொல்வோம் என்கிறது இந்தக் குரல்- இந்திய நீதி என்ன செய்யப் போகிறது? ]