மக்கள் நலக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறார். மக்கள் கூட்டணி நலக் கூட்டணி தலைவர்களான ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன், வைகோ, தொல். திருமாவளவன் ஆகியோர் இன்று விஜயகாந்தை சந்தித்து பேசினர். சந்திப்பு முடிந்ததும் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிகவுடன் தொகுதி பங்கீடு செய்து கொண்டதாக அறிவித்தனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். தேமுதிக 124 தொகுதிகளிலும் மக்கள் நலக் கூட்டணி தலைவர் 110 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.