ச. தமிழ்ச்செல்வன்

கோவை அரசு மருத்துவமனையில் ஒரு சர்வதேச அனாதையைப்போல கைவிடப்பட்டுக்கிடக்கிறாள் கௌசல்யா. காதல் மணம் புரிந்த சங்கர் கண் முன்னால் வெட்டிச் சாய்க்கப்பட்டதைக் கண்ட அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல்.. இதுவரை மார்க்சிஸ்ட் கட்சித்தோழர்கள், ஜனநாயக மாதர் சங்கத்தினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், அய்யா வைகோ, அறிவியல் இயக்கத்தோழர்கள் மோகனா, உதயன் போல வெகு சிலரே சென்று அந்தப் பெண் குழந்தையைக் கண்டு வந்துள்ளனர். குறைந்த பட்சம் கோவை வட்டாரத்தில் உள்ள பல்வேறு அமைப்பினர் முறை வைத்துத் தினசரி ஒரு குழு எனச் சென்று நம் குழந்தையைப் பார்த்துத் தைரியம் சொல்லி வருவது அவசியம். நம்பிக்கை ஊட்டுவது அவசியம். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் கௌசல்யாவின் படிப்புச் செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக இன்று அறிவித்திருப்பது ஆறுதல் தரும் செய்தி. இன்னும் பல இயக்கங்கள் நிச்சயம் உதவும் மனநிலையில்தான் இருப்பார்கள். உதவுவார்கள். ஆனாலும் இப்போது கௌசல்யாவைச் சந்தித்துப் பேசி நாமெல்லோரும் அவள் கூட நிற்கிறோம் என்பதை உணர்த்துவது மிக மிக அவசியமல்லவா?
ச. தமிழ்ச்செல்வன், எழுத்தாளர்; தமுஎகச பொதுச் செயலாளர்.