இரண்டு நாட்களாய் இணையத்தில் நெஞ்சுரம் கொண்ட ஆணவக் கொலைக்கெதிரான கட்டுரை( புகைப்படம் ) பார்த்த போதே அதன் பின்னிருக்கும் அரசியல் எனக்கு நன்கு புரிந்தது. இணையத்தில் இதைப் புரிந்து கொள்ளாமல் அவரவர் அரசியல் புரிதலும் அவசரமான பழி வாங்கும் சொற்களும் மிக ஆபாசமாக பகிர்ந்து கொள்ளப்பட்டன.
கொற்றவை, குட்டி ரேவதி ,முக்கியமாக ஜோதியின் களப்பணி நான் அறிந்ததே. அவர்கள் ஒருபோதும் அப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுக்க முடியாதென திண்ணமாக எண்ணினேன். நம்பினேன். தனிவிரோத தாக்குதல்களாய் தூக்கி வீசப்பட்ட வார்த்தகளில் இயேசுவின் வார்த்தைகள் ஒளிந்திருந்தது. உங்களில் குற்றமற்றவர்….பிராமண நிறுவனங்களில் பிழைப்புவாதம் நடத்தும் ” போராளிகள் ” கொதித்தார்கள்
ஆனால் இன்றும் வேறு பெண்களுடன் அந்த நெஞ்சுரம் கொண்ட campaign தொடர்கிறது. பீர் முகமது என் நண்பர். இந்தியா டூடேயில் அவரது கட்டுரைகள் மிக முக்கியமானவை. ஆனால் பின்னாளில் கூடங்குளம் அணூலைக்கு ஆதரவான, அதிமுக ஆட்சியின் கொ.ப.செ வாக அவர் மாறியது எனக்கு உவப்பாயில்லை. செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விட்டதில் அதிமுக அரசுக்கு க்ளீன் சிட் கொடுத்து இப்போது .காம் எழுதிய கட்டுரை ஒன்றை நான் கடைசியாகப் படித்தேன்..
அங்கு பணியாற்றிய நண்பர்கள் எல்லோருமே ஒன்றன்பின் ஒன்றாக வெளியே வந்து விட்டார்கள். இசையரசு, நந்தினி, அமுதா ….இப்போது பீர் முகமதுவிற்கு இப்போது.காமை முன்னிருத்தும் பிழைப்பு அரசியல் நிகழ்த்த வேண்டியுள்ளது. இதை புரிந்து கொள்ளாமல், களத்தில் ஆயிரம் பணிகள் இருக்க அடிங்கடா…மிதிங்கடா என்று உங்களை திசை மாற்றி செயல்பட வைப்பதைப் புரிந்து கொள்வீர்களா? ஏற்கனவே சிலர் மேல் இருக்கும் காண்டை இந்த வேளையில் உபயோகித்து கொள்வதன் உக்கிரகேவலத்தை விட்டு வருவீர்களா?
பெண்கள் மட்டும் தான் இந்த campaignல் இருக்கிறார்கள். இப்போதும் சொல்கிறேன். இப்போது.காம் பீர் என் நண்பர். கொள்கையில் அல்ல. கெளசல்யா படிக்க வேண்டும் என்று விரும்புகிறாள் என்று ஒரு செய்தி வாசித்தேன். அதை செய்வோம் நாம்.
என் சாதி உயர்வானது என்று சொல்லும் எல்லோருமே பிராமணர்கள் தான். அது பிராமணர், நாடார், தேவர், தலித், வன்னியர், கோனார், முதலியார், பிள்ளைமார், கவுண்டர் யாராக இருந்தாலும்….
தமயந்தி, எழுத்தாளர்.