”எனது மாமாவையும், அம்மாவையும் கைது செய்துட்டீங்களா?” சாதியை மறுத்த கௌசல்யாவின் கேள்வி

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண் டதற்காக தலித் இளைஞர் சங்கர், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கௌசல்யா தம்பதியை 6 பேர் கொண்ட கும்பல், ஞாயிற்றுக்கிழமையன்று உடுமலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டி யது. இதில் சங்கர் உயிரிழந்தார். கௌசல்யா தலையில் பலத்த காயங்களுடன் கோவை அரசுமருத்துமவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணைய அதிகாரிகள் உடுமலையில் விசாரணை மேற்கொண்டனர். உடுமலை காவல் நிலையத்துக்கு வந்த ஆணை யத்தின் ஆராய்ச்சி அலுவலரான சந்திரபிரபா, கள ஆய்வாளர் கிளிஸ்டர் உள்ளிட்ட அதிகாரிகள் காவல் துறையினரின் நடவடிக் கைகள் குறித்து விசாரணை நடத்தினர். மேலும், சம்பவம் குறித்து முறையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா, எந்தெந்தப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களை கேட்டறிந்தனர்.

பின்னர், கொலை நடந்த இடத்தையும் பார்வையிட்டு, உடுமலையை அடுத்த குமர லிங்கத்தில் உள்ள சங்கரின் வீட்டுக்கும் ஆணைய அதிகாரிகள் சென்றனர். அங்கு சங்கரின் தந்தைவேலுச்சாமியிடம் அரசு வழங்கிய நிவாரணம் குறித்தும், குடும்பத்துக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா? எனவும் கேட்டறிந் தனர். பல்லடத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பயணியர் விடுதியில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தியிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, கோவைஅரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் சங்கரின் மனைவி கௌசல்யாவிடம் ஆணைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அதிகாரிகளைப் பார்த்ததும் கதறியழுத கௌசல்யா, என் மாமா பாண்டித் துரை, அம்மா அன்னலட்சுமி ஆகியோரை கைது செய்து விட்டீர்களா? என்று ஆவேசமாக கேட்ட அவர், அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து தனது கணவர் சங்கரின் குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அப்போது, கௌசல்யாவை சமாதானப் படுத்திய ஆணைய அதிகாரி நாங்கள் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என உறுதி அளித்தார். அதிகாரி சந்திரபிரபா கௌசல்யாவிடம் உனக்கு என்ன வேண்டும்? வேலைக்கு செல்ல விருப்பம் உள்ளதா? என்று கேட்டார். அப்போது கௌசல்யா நான் எனது படிப்பை தொடர நினைக்கிறேன் என்றார். ஆணைய அதிகாரி இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சுமார் 45 நிமிடம் இந்த விசாரணை நடைபெற்றது.

தீக்கதிர்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.