“செஞ்சோற்று கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா” சாதிக் பாட்சா குடும்பத்தினர் ஒட்டிய போஸ்டரால், மீண்டெழுந்த 2 ஜி பூதம்!

பெரம்பலூரைச் சேர்ந்தவரான சாதிக் பாட்சா, சென்னை தியாகராய நகரில் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக இருந்து வந்தார். இவரது மனைவி ரஹானா பானு. இவர்களுக்கு அதின் என்ற மகனும், அசின் என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிறுவனத்தில் ஆ. ராசாவின் சகோதரர் ஆ. கலியபெருமாள், உறவினர் ஆர்.பி. பிரமேஷ்குமார் ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர். 2004-ம் ஆண்டு ரூ. 1 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் வர்த்தகம் குறுகிய காலத்தில் ரூ. 600 கோடியைத் தாண்டியது. ரூ. 1.76 லட்சம் கோடி அளவிலான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் நெருங்கிய நண்பர் என்பதால், ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டதா என சிபிஐ அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி டெல்லி, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆ. ராசா மற்றும், அவரது உறவினரின் வீடுகள், வணிக நிறுவனங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சாதிக் பாட்சாவின் வீட்டிலும் சோதனை நடந்தது. இதன் பின்னர் இரண்டு முறை சாதிக் பாட்சாவை டெல்லிக்கு அழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் விசாரணைக்காக சாதிக் பாட்சா அழைக்கப்பட்டிருந்த  நிலையில், 2011-ஆம் ஆண்டு  மார்ச் மாதம் 16-ந் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

 

சாதிக் பாட்சா இறந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவருடைய நினைவு நாளான புதன்கிழமை(16-3-2016) அவருடைய குடும்பத்தினர், பெரம்பலூர் வட்டாரத்தில் போஸ்டர் ஒட்டியும் நாளிதழ்களில் விளம்பரமாகவும் நினைவாஞ்சலி செலுத்திருந்தனர்.

sadiq bastsha

அதில் சாதிக் பாட்சாவின் புகைப்படத்துடன், “செஞ்சோற்று கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா” என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது விவாதத்தை உருவாக்கியிருக்கிறது.

2 ஜி பூதம் கிளம்பியதாக என்டிடீவி, டைம்ஸ் நவ் உள்ளிட்ட ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

தினமணி, என்டிடீவி உதவியுடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.