உடுமலைப் பேட்டையில் சாதிய வன்மத்தால் வெட்டப்பட்ட சங்கரும் கவுசல்யாவும் உடுமலைப் பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். அங்கே சங்கருக்கு செய்யப்பட்ட சிகிச்சைகளைப் பார்க்கும்போது மருத்துவர்களின் அலட்சியமே சங்கரை கொன்றியிருக்கிறது என சந்தேகம் வருகிறது. சங்கர், மூச்சுவிட முடியவில்லை என்று பேசுகிறார், தண்ணி கொடுங்க என்று கேட்கிறார்.
இணைக்கப்பட்டிருக்கும் வீடியோவை மெல்லிய இதயம் கொண்டோர் பார்க்க வேண்டாம் என கேட்கிறோம்.
அவசர அறுவை சிகிச்சைகளுக்கு வயிறு காலியாக இருப்பது அவசியம், அதனால் அவசர காலங்களில் தண்ணீர் தரப்படாது. தஞ்சை மருத்துவமனையில் விபத்தில் காயம்பட்டோர் தண்ணீர் கேட்டு அழுவதையும் மூத்த மருத்துவர்கள் வரும்வரை அவர்களுக்கு தண்ணீர் மறுக்கப்படுவதையும் பார்த்திருக்கிறேன்.
சிகிச்சையில் அலட்சியம் என்பது மருத்துவமனை ஊழியர்களின் தனிப்பட்ட தவறல்ல. போதுமான உபகரணங்கள், பணியாளர்கள் ஆகியவை அரசு மருத்துவமனைகளில் இருப்பதில்லை. அந்த கோபத்தை அவர்கள் இந்திய சமூக வழக்கப்படி இளைத்தவர்களிடம் காட்டுகிறார்கள். இத்தகைய தாக்குதல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களை தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்கே எடுப்பதில்லை.
எல்லா விபத்து மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைக்கே அனுப்பப்படுவதால் சிறிய மருத்துவமனைகள் ரிஸ்கை குறைக்க நோயாளியை பெரிய மருத்துவமனைக்கு அனுப்ப முற்படுகிறார்கள். இங்கே விசயம் பெரிதானதால் இச்சம்பவம் மட்டும் நமக்கு அதிர்ச்சியளிக்கிறது.
இதில் நாம் முற்றாக அரசு மருத்துவமனையை குறை சொல்வது நியாயமல்ல.
LikeLike