சீமானின் ஈழத்துப் பயணக் கதை உண்மையா?

வி. சபேசன்

வி.சபேசன்
வி.சபேசன்

சீமான் நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு வழங்கிய ஒரு நேர்காணல் சமூக வலைத்தளங்களில் பெருமளவு கிண்டலடிக்கப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

அதில் சீமான் தான் எப்படி ஈழத்திற்கு போனேன் என்றும், தலைவர் தனக்கு எப்படி துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி அளித்தார் என்றும் சொல்கிறார்.

யாரும் உயிரோடு இல்லை என்கின்ற அசட்டுத் தைரியத்தில் சீமான் சற்று அதிகமாகவே ‘ரீல்’ விட்டிருப்பது தற்பொழுது சமூகவலைத்தளங்களில் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியிருக்கிறது.

சீமானுடைய அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், சில உண்மைகளை நேர்மையாக ஒத்துக் கொண்டு விடலாம். சீமான் ஈழத்திற்கு சென்றது உண்மை. அங்கே சில நாட்கள் தங்கியிருந்தது உண்மை. தலைவரை சந்தித்ததும் உண்மை. இந்த உண்மைகளை வைத்துக் கொண்டு சீமான் இன்று கதை கதையாக சொல்லிக் கொண்டிருக்கிறார். சீமான் ஒரு திரைப்பட இயக்குனர் என்பதனால் இப்படி கதை சொல்வது அவருக்கு இயல்பாக வருகிறது.

அப்பொழுது விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டில் பல துறைகளில் தமது ஆதரவுத் தளங்களை வலுப்படுத்துவதில் கவனமாக இருந்தார்கள். சினிமாத் துறையில் இருந்தும் பலரை அழைத்தார்கள். இயக்குனர் மகேந்திரன், பாரதிராஜா என்று பலர் ஈழத்திற்கு சென்றார்கள். சீமானும் ஈழத்திற்கு சென்றார்.

மற்றையவர்களை விட சீமான் மீது விடுதலைப்புலிகளுக்கு அதிக கவனம் இருந்தது உண்மை என்பதையும் இதில் ஒத்துக் கொள்ளலாம்.

சீமான் அப்பொழுது ‘தந்தை பெரியாரின்’ பேரனாக இருந்தார். கொளத்தூர் மணி போன்றவர்கள் சீமானின் வழிகாட்டியாக இருந்தார்கள். திராவிட சிந்தனைகளை உள்வாங்கிய தமிழுணர்வாளராக சீமான் அப்பொழுது இருந்தார்.

எந்த நெருக்கடியான நிலையிலும் தமக்கு ஆதரவாக நிற்கின்ற திராவிட இயக்கங்கள் போல், அவர்களின் மேடைகளில் நின்று முழங்கிக் கொண்டிருந்த சீமானும் ஆதரவாக இருப்பார் என்பது விடுதலைப் புலிகளின் கணிப்பாக இருந்தது.

அன்றைக்கு சீமான் ‘நாம் தமிழர்’ என்கின்ற ஒரு கட்சியையோ, இயக்கத்தையோ கொண்டிருக்கவில்லை என்பதையும், இப்பொழுது செய்கின்ற தமிழர் விரோத அரசியலை செய்யவில்லை என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

ஆகவே ஈழத்திற்கு வந்த மற்றைய இயக்குனர்களை விட, சீமான் மீது விடுதலைப் புலிகளுக்கு சற்று அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

ஈழத்திற்கு வந்த சீமான் கிளிநொச்சியில் தங்க வைக்கப்பட்டார். தலைவருடனான சந்திப்பும் நடந்தது. விடுதலைப் புலிகளின் காட்சி ஊடகங்கள் மற்றும் சினிமாத்துறையை சேர்ந்தவர்களுக்கு சில விளக்கங்களை கொடுக்கும்படி தலைவர் சீமானைப் பணித்தார். போராளிகள் மற்றும் தளபதிகளுக்கு முன்னால் உரையாற்றும் வாய்ப்பும் சீமானுக்கு வழங்கப்பட்டது.

சீமானை இப்படி தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தினால், தற்பொழுது செல்கின்ற பாதையில் சீமான் தொடர்ந்தும் உறுதியுடன் செல்வார் என்பது விடுதலைப் புலிகளின் நம்பிக்கையாக இருந்தது.

கிளிநொச்சியில் அமைந்திருந்த தமிழீழ நுண்கலைக் கல்லூரியின் மண்டபத்தில் சீமான் உரையாற்றினார். தந்தை பெரியாரையும் தலைவர் பிரபாகரனையும் ஒப்பிட்டு சீமான் பேசினார். அன்று தந்தை பெரியார் தமிழர்களுக்கு எப்படியான போராட்டங்களை நடத்தினார் என்பதை விளக்கினார். இன்றைக்கு தலைவர் பிரபாகரன் நடத்துகின்ற போராட்டம் பற்றி புகழ்ந்துரைத்தார்.

ஆரம்பத்தில் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்த போராளிகளும், தளபதிகளும் ஒரு நேரத்தில் மெல்ல மெல்ல மண்டபத்தில் இருந்து நழுவத் தொடங்கினர். விடுதலைப் புலிகளிடமே வந்து தலைவர் பிரபாகரன் யார் என்று சீமான் படிப்பிக்க முற்பட்டதுதான் அதற்கு காரணம்.

‘என்னடா இவன், தமிழ்நாட்டு நிலைமைகளைப் பற்றிக் கூறுவான் என்று வந்தால், எங்கள் தலைவர் பற்றி எங்களுக்கே சொல்லித் தருகிறானே’ என்று சலிப்போடு அங்கிருந்து மெதுவாக பலர் வெளியேறினர்.

தமிழ்நாட்டில் இருந்து வந்த விருந்தினரின் மனம் நோகக் கூடாது என்பதனால், சிலர் பல்லைக் கடித்துக் கொண்டு சீமான் பேசி முடிக்கும் வரை உட்கார்ந்திருந்தனர்.

ஏனோ தெரியவில்லை, துப்பாக்கி சுடுவது பற்றியெல்லாம் பேசுகின்ற சீமான் இப்படியான உண்மைகளை எங்கும் பேசவதாகத் தெரியவில்லை.

இப்படியான வீரதீர உரைகளை எல்லாம் கிளிநொச்சியில் நிகழ்த்தி விட்டு, சீமான் தமிழ்நாடு திரும்பினார். அங்கே மேலும் உத்வேகத்தோடு பெரியார் இயக்க மேடைகளில் நின்று புலிகளுக்கு ஆதரவாக முழங்கினார்.

ஆனால் எந்த மேடையிலும் தான் கிளிநொச்சி சென்ற கதை பற்றி சீமான் மூச்சுக்கூட விடவில்லை. அன்றைய சூழ்நிலைகளில் அதை சொல்வது தனக்கு சட்டச் சிக்கலை கொண்டு வரும் என்று சீமான் அஞ்சினார்.

2009இல் ஈழத்தில் ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டது. அதன் பின்னர் ஈழ ஆதரவுப் போராட்டங்களும், தலைவரின் படங்களும் கண்டு கொள்ளாமல் விடப்பட்டன. ஈழ ஆதரவுப் போராட்டத்தை தவறான சக்திகள் கையில் எடுப்பதற்கான கதவுகள் திறந்து விடப்பட்டன.

சீமானும் தவறானவர்களின் போதனைகளினால் வழி மாறினார். விடுதலைப் புலிகளால் நம்பிக்கையோடு ஈழத்திற்கு அழைக்கப்பட்ட சீமான் காணாமல் போனார். அப்பொழுது இருந்த நிலைப்பாடுகளை எல்லாம் மாற்றினார். தமிழ்நாட்டிலும், இப்போது புலம்பெயர் நாடுகளிலும் ஈழ ஆதரவு சக்திகளை பிளவுபடுத்தும் வேலையை சீமான் செய்து வருகின்றார்.

One thought on “சீமானின் ஈழத்துப் பயணக் கதை உண்மையா?

  1. தினமலரில் வன்மத்தைக் கக்கி இருப்பவனை மனிதன் என்ற கணக்கில் சேர்க்க முடியாது. நாய்களில் சாதி இருப்பதாகத் தெரியவில்லை (சாதி நாய் என்ற நாம் சொல்லிக்கொள்வது தவிர) என்பதால் அப்படிக் குறிப்பிட்டு நாயைக் கேவலப்படுத்த விரும்பவில்லை. ஏண்டா, இந்த சங்கர் 2 மாதத்தில் பொறியியல் கல்வி முடிக்க இருந்தார். ஏற்கனவே தனியார் நறுவனத்தில் வேலையும் (கவனிக்கவும்- முழுக்க முழுக்க தகுதி அடிப்படையில்) வேலை கிடைத்துவிட்டது. அப்படிப்பட்ட பொறுப்பான திறமைசாலிடா அவர். கலப்பு மணம் பண்ணவங்க நல்லா இருக்காங்களோ கஷ்டப்படறாங்களோ, உன்னிடம் வந்து சோறு போடச் சொன்னாங்களா? உனக்கு என்னடா வந்தது?
    ஏழையாக இருப்பதே கேவலம் என்று வெளிப்படையாக இப்படி ஈனத்தனமாக எழுதுவது எந்த நாகரிக நாட்டிலும் நடக்காது. அப்படிச் செய்தால் அந்தப் பத்தரிகை ஜென்மத்துக்கும் தலைதூக்க முடியாதபடி புறக்கணிப்புக்கு உள்ளாகும்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.