தேவர் சாதி பெண்ணை திருமணம் செய்துகொண்டார் என்பதற்காக தலித் இளைஞர் சங்கர், உடுமலைப் பேட்டையில் பகல் நேரத்தில் நடுசாலையில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார். அவர் மணந்த கவுசல்யாவுக்கு அரிவாள் வெட்டுகள் விழுந்தன.
இந்த சம்பவம் குறித்து உங்களுடைய கருத்தென்ன என்று பாமக நிறுவனர் ராமாதாஸிடம் தொலைக்காட்சி நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு, “இதைவிட எவ்வளவு செய்தி இருக்கு அதைப் போடுங்க” என்று சொல்லி கிளம்பினார்.
“உடுமலைப் பேட்டை கொலை உட்பட எல்லா கொலைகளையும் நாங்கள் கண்டிக்கிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை சரியில்லை என்பதையே இது காட்டுகிறது. பாமகவை நோக்கி மட்டும் இந்தக் கேள்வி வருகிறது. இன்னும் சில கட்சிகள் இதுபற்றி மவுனம் சாதிக்கிறார்களே அவர்களிடம் கேட்பார்களா?” என தெரிவித்திருக்கிறார்.