பசு நேசர்களாகவும் உயிர்களின் மேல் அளவற்ற அன்பு கொண்டவர்களாகவும் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் பாஜகவைச் சேர்ந்த எம் எல் ஏ, உத்தரகாண்ட் மாநில சட்டசபை வளாகத்துக்கு வெளிய ஒரு குதிரையின் காலை லத்தியால் அடித்தே ஒடித்திருக்கிறார்.
உத்தரகாண்டில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக, பா.ஜ.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது கலவரமாக மாறியது, ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க போலீசார் குவிக்கப்பட்டனர். இதில் குதிரைப்படை போலீசாரும் பாதுகாப்புக்கு நின்றிருந்தனர். அப்போது அம்மாநில பா.ஜ. எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி, ஒரு போலீசாரிடமிருந்த லத்தியை பறித்து குதிரையின் இடது பக்க பின்னங்காலை நிறுத்தாமல் தொடர்ந்து அடித்து அந்த குதிரையின் காலை ஒடித்துவிட்டார். வலி தாங்காமல் குதிரை அங்கேயே சுருண்டுவிழுந்தது. இந்த காட்சி வீடியோவாக பதிவாகி வைரலாக பரவத் துவங்கியது.
இந்த மனிதமற்ற தாக்குதலை நடத்தி கணேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குதிரை ஆம்புலன்ஸில் சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்த மாநில முதல்வர் ஹரீஷ் ராவத், “குதிரையை லத்தியால் அடிக்கிறீர்களே? சகிப்பின்மை என்ற வார்த்தையே பாஜகவின் டிக்ஷ்னரியில் இல்லையா? என்று தெரிவித்தார்.
பாஜக எம் எல் ஏ என்ன சொல்கிறார் தெரியுமா? “குதிரை நீண்ட நேரத்தில் வெயில் நின்றதால் நிலைக்குலைந்து விழுந்து காலை ஒடித்துக்கொண்டது”.
விலங்குகள் நல ஆர்வலர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.