சென்னையில் உள்ள பிரபல பள்ளிகளில், புது வருடத்திற்கான சேர்க்கை தொடங்கி விட்டது. விண்ணப்பங்களை வாங்குவதற்காக இரவும் பகலுமாக சாலையில் தவம் கிடக்கும் பெற்றோர்களின் புகைப்படங்களை பத்திரிக்கைகளில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.
விண்ணப்பம் பெறும் பெற்றோர்கள் எல்லாம், தங்கள் பிள்ளைகளுக்கு அந்த பள்ளிகளில் இடம் வாங்கி விடுகிறார்களா ? என்றால் இல்லை.
அடித்து பிடித்து முதலில் நின்று விண்ணப்பம் வாங்கினால் கூட, “கையெழுத்திட்ட வெற்று காசோலையோடு” நிற்கும் பெற்றோரின் பிள்ளைகளுக்குதான் அங்கு படிக்க வாய்ப்பு கிடைக்கிறது.
சென்னையின் பிரபல பள்ளிகளில், எல்.கே.ஜி.யில் பிள்ளைகள் படிப்பதற்கான, இல்லை இல்லை… நுழைவதற்கான கட்டணம்…கட்டணம் இல்லை.. நன்கொடை எவ்வளவு ? என்பதை பார்த்து விடலாம்.
*சிந்தி மாடல் ஸ்கூல் – 40 ஆயிரம் ரூபாய் டொனேஷன். (திருப்பி அளிக்கப்பட மாட்டாது)
*விருகம்பாக்கம் சின்மயா வித்யாலயா – 50 ஆயிரம் ரூபாய் டொனேஷன்
*செயின்ட் ஜான்ஸ் பள்ளி – ஒரு லட்சம் ரூபாய் டொனேஷன்
*பொன் வித்யாஷ்ரமம் – ஒன்னேகால் லட்சம் ரூபாய் டொனேஷன்
*எஸ்.பி.ஒ.ஏ – ஒன்றரை லட்சம் ரூபாய் டொனேஷன் (திருப்பி அளிக்கப்பட மாட்டாது)
*பி.வி.எம் – ஒன்றரை லட்ச ரூபாய் டொனேஷன்
*செட்டிநாடு பள்ளி – ஒன்றரை லட்சம் ரூபாய் டொனேஷன்
*எக்மோர் டான் பாஸ்கோ – இரண்டு லட்சம் ரூபாய் டொனேஷன்
*மைலாப்பூர் வித்யா மந்திர் – இரண்டு லட்சம் ரூபாய் டொனேஷன்
*******
இந்தளவு பணம் கையில் வைத்திருப்பவர்கள் மட்டுமே, தங்களுடைய பிள்ளைகளை இந்த பள்ளிகளில் விற்பதற்கு தகுதியானவர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
*சென்னை பள்ளிகளில், தங்கள் பிள்ளைகளை சேர்க்க உள்ள பெற்றோர்கள், அதை பற்றிய தகவல்களை அதிகாரபூர்வமாக பகிர்ந்துகொள்ளும் Parent Tree என்ற அமைப்பில் இருந்தே இந்த தகவல்களை சேகரித்திருக்கிறோம்.
*******
முகப்புப் படம்: D.A.V பள்ளியில் தங்கள் பிள்ளைகளுக்கு எல்.கே.ஜி விண்ணப்பம் வாங்குவதற்காக குவிந்திருக்கும் பெற்றோர்.