கரூர் மாவட்டம் கடவூர் வட்டம், தரகம்பட்டியில் பொது சாலையில் தலித் மக்கள் நடமாட தடை விதித்து, அந்தப் பகுதியில் திமுகவைச் சேர்ந்தவர்கள் முள்வேலி அமைத்துள்ளதாக படங்களுடன் செய்தி பகிர்ந்திருக்கிறார் பூவை லெனின்.
அவருடைய பதிவில் லெனின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“தரகம்பட்டி வடக்கு தெருகாலனியில் பொது சாலையில் தலித் மக்கள் நடமாட தடை. பொதுப்பாதையில் முள்வேலி போட்டு தடுப்பு. தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் தயாளன் மற்றும் அவர் தம்பி ராகுல்காந்தி சாதி வெறியாடட்டம். தட்டி கேட்ட சகோதரர் ஆனந்துக்கு அடி உதை?”
*சமூக நீதிப் பாதையில் வந்த திமுக முள்வேலி இட்டு தலித்துகளை ஒடுக்கும் அளவுக்கு கொள்கையை கைவிட்டுவிட்டதா என சமூக ஊடகங்கள் விமர்சனம் எழுப்புகின்றன.