வாழும் கலையை வாழ்வைக்கவா இந்திய ராணுவம்? பிரதமருக்கு ஓர் இந்திய இராணுவ வீரரின் திறந்த மடல்!

மதிப்பிற்குரிய பிரதம அமைச்சர் மாண்புமிகு மோடிஜிக்கு,

எல்லையில் இருந்து இக்கடிதம் எழுதும் என்னை தேச துரோக வழக்கில் உள்ளே தள்ளி உதைக்க மாட்டிர்கள் என நம்புகிறேன்.

ஜம்முவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஜெய் கிசான் ஜெய் ஜவான் என முழங்கிய மதிப்பிற்குரிய மோடி ஜி ஆட்சியிலும் என்னோடு ஒன்றாக உண்டு உறங்கி காவல் காத்த தர்மேந்தர் பாகிஸ்தானால் கொல்லப்படுகிறான்.பசவப்பா எனும் ஆகச்சிறந்த வாலிபால் ப்ளேயர் இடுப்பில் சுடப்பட்டு கிடக்கிறான் குத்துயிராக.

அதே தாக்குதல் செய்திகளின் பின்னணியில்தான் பாகிஸ்தானில் நீங்கள் கை குலுக்கியும் கண்ணீர் விட்டும் கலைச்சேவை செய்து கொண்டிருந்தீர்கள். அரசியல் மற்றும் அதானியின் பொருளாதார சூழ்நிலை பொருட்டு நட்பு பாராட்டலாம் தப்பில்லை என்றால் ஜெய் ஜவான் பிரச்சாரம் ஏன் என உள்மனது கேட்கிறது மோடி ஜி… இல்லை இதுவும் அந்த பதினைந்து லட்ச கருப்பு பண வாக்குறுதி போன்ற அரசியல் தந்திரம் என அமித் ஷா மூலம் அறிவித்து செல்வீர்களா?

போகட்டும்,சாகத்தானே உடை தரித்தீர்கள் ஆயுதம் பெற்றீர்கள் என உங்கள் உள் மனது சொல்லலாம்.

ஆச்சர்யம் என்னவெனில் ரவி சங்கரின் ‘வாழும் கலை’ இந்திய ராணுவத்தில் எப்போது இணைந்தது என்பதுதான். ‘வாழும் கலை’ ரவிசங்கர் யமுனை நதியில் நடத்தும் நிகழ்ச்சிக்கு இந்திய ராணுவத்தினர் பாலம் போட பணிக்கப்பட்டுள்ள செய்தி பார்த்து அதிர்ந்து போனேன். ஒரு தனியார் நிறுவன ஆடம்பர நிகழ்ச்சிக்கு ஏன் இந்திய ராணுவத்தை பயன் படுத்த வேண்டும்?

கழுத்தளவு நீரில் எல்லையோரம் காவலுக்கு சென்றவன் என்ற அடிப்படையில் கேட்கிறேன்…பாலங்கள் யமுனை நதியில் தினவெடுத்து திரியும் ‘வாழும் கலை’ நிகழ்ச்சிக்கு அவசியமா இல்லை எல்லையிலா?

வாழும் கலை இருக்கட்டும் சாகும் கலையை விதர்பா முதல் இந்தியா முழுமைக்கும் எப்போது கற்று கொடுத்தீர்கள் மோடிஜி ? நீங்கள் ஆட்சிக்கு வந்தபின் விவசாயிகளின் தற்கொலை விகிதம் அதிகமாகி உள்ளதாம் கவனீத்தீர்களா ஜி ?

யமுனையில்தான் அந்த நிகழ்ச்சி நடக்க வேண்டுமா என்ன? பரந்த பாலைவனம் நிறைந்த ராஜஸ்தானில் இல்லாத இடமா? வாழும் கலையை அந்த விரிந்த வெளியில் கற்று கொடுக்கலாமே மோடிஜி.அத்தனை மன வலிமை இருக்கிறதா என்ன வாழும் கலை வல்லவர்களுக்கு?

இந்த பாலம் கட்டும் பணிக்கு ராணுவத்திற்கு பணம் கொடுத்ததாக சப்பை கட்டலாம்.நாளையே ரவிசங்கர் பணம் கொடுத்துட்டு வீட்டுக்கு காவலுக்கு கேட்டாலும் அனுப்பி வைப்பிர்களா மோடிஜி? இன்னும் கொஞ்சம் பிராச்சி போன்று தரம் கெட்டு கேட்பதானால் நாளை நித்தியானந்தா பணம் கட்டினால் காவலிலிருக்கும் பெண் ராணுவத்தினரை நித்திக்கு அனுப்பி விட மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?

நீதிபதிகளின் உள்ளாடை துவைக்க அரசுப்பணியாளர்,ஆபிசர்களின் சூ பாலிஸ் போட சிப்பாய்கள்,உழைக்காமல் பிழைக்கும் வாழும் கலை ரவிசங்கர்க்கு பாலம் போட இந்திய ராணுவம்,அதானிக்கு அக்ரிமென்ட் போட்டு கொடுக்க ஒரு பிரதமர், அற்ப விசயத்துக்கு ஐந்து முறை கடிதம் எழுதும் அமைச்சர் ,,கார்பரேட் தியேட்டரில் பாட்டு பாடி ஆட்டம் போட காங்கிரஸைப் போலவே ஒரு கையாலாகாத அரசு… வாரே வாவ்!!

இளமையை,வாழ வேண்டிய வாழ்வை தொலைத்து கரைந்து நிற்கும் இராணுவத்தினரின் பெயரில் தேசபக்தி முகமூடியில் ஓட்டரசியல் செய்தது போதும் மோடிஜி. கண்ணையாக்கள் பல்கலைக்கழகங்களில் மட்டும் இல்லை. படைகளிலும் உண்டு. அவர்கள் கல்வியோடும் நாங்கள் ஆயுதங்களோடும் தனித்தனியே இருக்கிறோம் மோடி ஜீ.. எங்களை இணைத்துக்கொண்டிருக்கிறிர்கள் நீங்கள். சுக்ரியாஜி.
ஜெய் பீம்! லால் சலாம்!!

குறிப்பு- 1
அறம் சார்ந்த டாக்ஸ் பேயர்கள் (பேய்கள்னு வாசிக்கலாம் தப்பில்லை), அறிவில் சிறந்த தேசபக்தர்களெல்லாம யமுனையை பாழடிக்கும்போதும் அதில் ராணுவத்தினர் கூலிக்கு வேலை பார்ப்பதையும் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதை ஹனுமந்தாக்கள் வன்மையாக கண்டிக்கிறார்கள்.

குறிப்பு – 2
காங்கிரஸ் ஆட்சில கேட்காத நீ இப்ப மட்டும் ஏன் கேட்கிறன்னு கேட்கலாம். இப்போ கொஞ்சம் தேசபக்திக்கான சோதனைகள் சற்று அதிகமாகவே நடக்கிறது என்பதை கவனிக்கவும். அத்தோடு யாம் காங்கிரஸின் அனுதாபியும் அல்ல. ஆட்சியிலிருப்பவரைத்தான் கேட்க முடியும் அன்றி கன்னையாவிடம் அல்ல.டாட்.

– சதீஷ் செல்லதுரை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.