ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஏபிவிபி மாணவர் அமைப்பின் இன்னாள் மற்றும் முன்னாள் தலைவர் சிலர் சேர்ந்து பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் உள்ள மனுதர்மத்தின் சில பக்கங்களை பெண்கள் தினத்தில் கொளுத்தினர்.
ஆண்களை மயக்கும் குணம் கொண்டவளாகப் பெண் இறைவனால் படைக்கப்பட்டிருக்கிறாள் (அத்தியாயம் 213-2)
பெண்கள் சிறு வயதில் தந்தையின் பாதுகாப்பிலும், மணமானவுடன் கணவன் பாதுகாப்பிலும் கணவனுக்குப்பின் மகனின் பதுகாப்பிலும் இருக்க வேண்டும். (அத்தியாயம் 148 – 5)
என்ற இரண்டு வாக்கியங்களை படித்தார் ஏபிவிபியின் முன்னாள் இணை செயலாளர் பிரதீப் நார்வல். இவர் ஜேஎன்யூ மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்ட பிறகு, அந்த அமைப்பிலிருந்து வெளியேறியவர்.
இதுபோல சாதியத்தை வலியுறுத்தும் 40 வாக்கியங்கள் அடங்கிய பிரதியை நார்வல் பிடித்துக்கொள்ள இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் லெனின் குமார் கொளுத்தினார்.
அப்போது ‘மனுஸ்மிருதி கொளுத்தப்பட்டது, ஜேஎன்யூவின் ரத்தம் தோய்ந்த மண்ணையும் கொளுத்துவோம்’ என்று கோஷமிட்டனர்.