பீகார் மாநிலம் சுபால் மக்களவைத் தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரஞ்ஜீத் ராஜன் . 42 வயதான ரஞ்சித் ‘ஹார்லி-டேவிட்சன்’ நிறுவனத்தின் பைக்கில் பாராளுமன்றம் வந்து இறங்கி, அனைவரையும் ஆச்சரியத்திற்கு ஆளாக்கினார்.
பொதுவாக மக்களவைக்கு காரில் வரும் எம்.பிக்கள் தங்களது வாகனத்தைக்கூட பார்க்கிங்கில் நிறுத்த மாட்டார்கள்.அப்படியிருக்க காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி ரஞ்ஜீத் ரஞ்சன் இன்று தனது ஹார்லி டேவிட்சன் பைக்கை அவராகவே ஓட்டி வந்து பார்க்கிங் செய்து அனைவரையும் அதிர வைத்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்ஜீத், “என்னுடைய சொந்த வருமானத்தில் அந்த பைக்கை வாங்கினேன். என்னுடைய கணவரைக் கூட பைக்கை தொட விடமாட்டேன்” என்று பெருமிதமாக தெரிவித்துள்ளார்.