#பழம் நழுவி பாஜகவில் விழுந்ததா? “விஜய்காந்தை முதல்வராக்க பிரச்சாரம் செய்வோம்”:ஜவடேகர் 

ஒரு நாளுக்கு முன்புதான் திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக என்கிற பழம் கனிந்துவிட்டதாகவும் அது பாலில் விழும் தருணம் வந்துவிட்டதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

அடுத்த நாள், பாஜகவின் மேலிடப் பொறுப்பாள பிரகாஷ் ஜவடேகர், “தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துகொண்டுதான் இருக்கிறது. பிரேமலதா விஜயகாந்துடன் இன்றும்கூட பேசினேன். டெல்லி வர இருந்த அவரால் கட்சி பணிகள் காரணமாக வரமுடியவில்லை” என்று Rediff.com இணையதளத்திற்கு பேட்டியளித்திருக்கிறார். பாஜக – தேமுதிக இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்து பேச பிரேமலதா விஜயகாந்த் விரைவில் டெல்லி வரவுள்ளதாகவும் மொத்தமுள்ள 234 தொகுதிகளை பாஜக.,வும், தேமுதிகவும் சரிபாதியாக பங்கிட்டு கொள்வது தொடர்பான ஆலோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

“மக்களவை தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்று அவருக்காக விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். இப்போது எங்களுடைய நேரம்.  விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த பாஜக தயாராக இருக்கிறது” என்று அந்தப் பேட்டியில் சொல்லியிருக்கிறார் ஜவடேகர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.