கடந்த 4-ந்தேதியில் இருந்து,, தனக்கு டெலிபோனில் கொலை மிரட்டல் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளதாக, பத்திரிகையாளர் பர்கா தத் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக, பர்கா தத், செவ்வாய்கிழமை டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜராகி, வாக்குமூலம் அளித்தார்.
அப்போது, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பிரச்சினை குறித்து, தான் செய்தி வெளியிட்டதால், மர்ம நபர்கள், தன்னை டெலிபோனில் தொடர்பு கொண்டு, பாலியல் பலாத்காரம் செய்து கொன்று விடுவதாக மிரட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
*மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்த பின்பு, சமூக வெளிகளில் தைரியமாக தங்களது கருத்துக்களை தெரிவிக்கும் பெண்களுக்கு, இது போன்ற பாலியல் பலாத்கார மிரட்டல்கள் வருவது தொடர்கதையாகியுள்ளது என்று டிவிட்டரில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.