மும்பையில் ஆகஸ்ட் 15, 2010-ஆம் ஆண்டு, தேவதாசி பெண்கள் அரை நிர்வாணத்துடன் தங்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ. 2000 வழங்கக் கேட்டுப் போராடினர். அப்போது இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை அவர்கள் எழுப்பினர். இந்து மதத்தில் இந்து கடவுள்களுக்கு பெண் குழந்தைகளை ‘நேர்ந்துவிடுவது’ சமீபம் வரை வழக்கத்தில் இருந்த ஒன்று. இவர்கள் கடவுளுக்கு பணிவிடை செய்பவர்கள் என்ற பொருளில் தேவதாசி என அழைக்கப்பட்டனர். (Photo by Nagesh Ohal/India Today Group/Getty Images)
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜூலை 16, 2010-ஆம் ஆண்டு நடத்திய போராட்டத்தில் விடுதலை கோஷம் எழுப்பினர். காஷ்மீரில் ஆக்கிரமித்துள்ள இந்திய இராணுவத்திடமிருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும் என்பதும், பொதுமக்களை கொல்லும் ராணுவம் ஆட்சி திரும்பப் பெற வேண்டும் என்பதும் இவர்களுடைய கோரிக்கை.
(AFP PHOTO/Rouf BHAT (Photo credit should read ROUF BHAT/AFP/Getty Images)
****
போலிசாருடன் போரிடும் இவர்கள் Krishak Mukti Sangram Samiti (KMSS) என்ற அமைப்பைச் சேர்ந்த களப்பணியாளர்கள். குவாஹாத்தியில் ஜூன் 22, 2011-ஆம் ஆண்டு அரசு நிலத்தில் வசித்த குடிசைவாசிகளை விரட்ட போலீஸ் களமிறங்கியபோது அதைத் தடுக்க இந்தப் பெண்கள் போராடினர். இதில் மூன்று பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. (AFP PHOTO/STR (Photo credit should read STRDEL/AFP/Getty Images)
****
தலைப்பு கீழ்வருமாறு மைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், “ தேசத்துக்கு எதிராக கோஷமிட்டதாகக் கருதப்பட்ட……”
LikeLike