வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உலக கலாச்சார விழா என்ற பெயரில் மார்ச் 11-ம் தேதி முதல் மூன்று நாட்கள் நிகழ்ச்சி ஒன்றை யமுனா நதிக்கரையில் நடத்த உள்ளார். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 120 வீரர்கள் யமுனா நதியின் மேல் பாலம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு லிவ் யமுனா என்னும் ‘யமுனா நதி பாதுகாப்பு இயக்கம்‘ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சி யமுனா நதி பகுதியின் சூழலியலில் கடும்பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறி போராட்டத்துடன் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், யமுனை நதிக்கரையில் உள்ள வெள்ள சமவெளியில் தற்காலிக கட்டிடங்களை எழுப்புவதற்கு ஏன் அனுமதி பெற தேவையில்லை என்று விளக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பயம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிடுவதற்காக சென்ற சூழலியலாளர் விம்லேந்து ஜா என்பவரிடம் தி க்வின்ட் இணையதள பத்திரிகையில் செய்தியாளர் பேட்டி எடுத்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த இந்து மகாசபாவை சேர்ந்த டாக்டர். சுவாமி ஓம்ஜி என்பவர், பேட்டிக்கு இடையூறு செய்துள்ளார்.மேலும், உலக கலாச்சார விழாவை எதிர்த்து விமலேந்து ஜா, தொடங்கியுள்ள கையெழுத்து மனுவுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அத்துடன் மட்டுமல்லாது, ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரின் உலக கலாச்சார திருவிழாவை எதிர்க்கும் விம்லேந்து ஜா, ஒரு தேச துரோகி என்றும் இந்து விரோதி என்றும் கேமராவுக்கு முன்னாலேயே கடுமையாக குற்றம்சாட்டினார். அது மட்டுமல்லாமல்,
“யமுனா நதியை எதிர்த்து பேசுகிறான்”
“இந்தியாவை எதிர்த்து பேசுகிறான்”
“மதத்தை எதிர்த்து பேசுகிறான்”
” இவன் ஒரு சி.ஐ.ஏ ஏஜன்ட். இவன் ஒரு தீவிரவாதி”
” இவனை போன்றவர்களை எப்படி கவனிக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்”
என்றும் அனைவரின் முன்பாகவே சுவாமி ஓம்ஜீ மிரட்டல் விடுத்தார்.
பத்திரிக்கையாளர்கள் முன்னால், இது போன்ற மிரட்டல்களை விடுவதாக விம்லேந்து ஜா எச்சரிக்கை விடுத்தபோது “அது பற்றி தனக்கு எந்த கவலையும் இல்லை” என்று சுவாமி ஓம்ஜி அலட்சியமாக தெரிவித்தார்.
அந்த விடியோவை கீழே இணைத்திருக்கிறோம்……