#பெண்கள்தினம்: “அறுவருப்பானவள் அல்ல நான்”: ஃபேஷன் உலகில் தனி இடம் பதித்த ஹர்ணம் கவுர்!

பெண்கள் தினம், அழகு சாதனப் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் தினமாகிவிட்டது.  சிவப்பும் பளபளப்புமே அழகானவை, பெண்மைக்கு உரியவை என கூவிக்கூவி தங்களுடைய தயாரிப்புகளை விற்கின்றன தயாரிப்பு நிறுவனங்கள். இதே அழகு சார்ந்த துறையில் தனித்து நின்று, அழகு என்றால் என்ன? என்று நம்மை மறுபரிசீலனை செய்துகொள்ளச் சொல்கிறார் தாடி வைத்த ஹர்ணம் கவுர். அவருடைய தாடியும் பென்சில் மீசையும் மேற்குலகை ரசிக்க வைத்திருக்கின்றன.

harnam

ஹர்ணம் கவுர், இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரஜை. polycystic ovarian syndrome என்ற ஹார்மோன் தொடர்பான குறைபாடு(ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரத்தல்) காரணமாக இவருக்கு பதின் பருவத்தில் உடலில் முடிகள் வளரத் தொடங்கின. குறிப்பாக முகத்தில் தாடி வளர ஆரம்பித்தது. பெண்கள் பூனை முடிகளை நீக்க பயன்படுத்தும் க்ரீம்கள், வாக்ஸிங் போன்றவை ஆரம்பத்தில் பயன்படுத்திப் பார்த்திருக்கிறார். இவர் சார்ந்திருந்த சமூக இவரை ஒரு கேலிக்குரியவராகவே பார்த்திருக்கிறது. ‘பெண் ஆண்’ என்கிற கேலிச் சொற்களையும் ஹர்ணம் நோக்கி வீசியிருக்கின்றனர். ஆரம்பத்தில் துவண்ட ஹர்ணம், தன் கேலிகளையே தனக்குரிய தனிச்சிறப்பாக வளர்த்தெடுக்க விரும்பினார். சீக்கிய மத நம்பிக்கைப் படி உடலில் உள்ள முடிகளை நீக்கக் கூடாது. எனவே, அதை ஒட்டி தன்னுடைய உடல் முடிகளை நீக்கும் செயலுக்கு முற்றிப்புள்ளி வைத்த ஹர்ணமின் கனவு மாடலாவது!

“புகழ்பெற்ற America’s next top model என்ற நிகழ்ச்சியைப் பார்த்து வளர்ந்தவள். என்னுடைய லட்சியம் மாடலாக வேண்டும் என்பதுதான். நான் அந்த நிகழ்ச்சியில் வரும் மாடல்களைப் போல நடப்பேன், பார்ப்பேன். ஆனால், குண்டான, அசிங்கமான, அறுவருப்பான என்னுடைய உடல் அதற்கெல்லாம் சரிப்படாது என்றே என்னைச் சுற்றியிருந்தவர்கள் சொன்னார்கள். நான் எப்போதும் ரன்வேக்களில் நடக்கவே முடியாது என்று அவர்கள் சொன்னார்கள்.

நான் மாடலாக வேண்டும் என்று சொன்னபோது அவர்கள் சிரித்தார்கள். என் மீதான கேலிகளை நான் தூக்கி எறிந்தேன். நான் புகழ்பெற்ற @mariannaharutunian வடிவமைத்த நகைகளை அணிந்து இங்கிலாந்தில் புகழ்பெற்ற #royalfashionday முதல் மாடலாக நடந்து நிகழ்வை துவக்கி வைக்கிறேன். எனது ஆதர்சமான ஃபேஷன் உலக பிரபலங்கள் அமர்ந்து எனது நடையைப் பார்க்கப் போகிறார்கள்” என்று தன்னுடைய முதல் ஃபேஷன் ஷோ குறித்து தனது இஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் ஹர்ணம் கவுர். இந்த நிகழ்வு கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி நடந்தது.

harnam gaur

“என்னை அறுவருப்பானவள், அசிங்கமானவள் என பேசிய அனைவருக்கு எனது நன்றி. உங்களுடைய ஒதுக்குதலிலிருந்துதான் நான் பிறந்தேன். நன்றி” என்கிற ஹர்ணம், “எல்லாப் பாதைகலும் நடை போடும் மேடைதான். தலை நிமிர்ந்து தன்னம்பிக்கையோடு நடைபோடுங்கள்” என தன்னுடைய வாழ்க்கைச் செய்தியை சொல்கிறார்.

பார்ப்பவருக்கு முதல் பார்வையில் ஹர்ணம் அதிர்ச்சி கொடுத்தாலும், பெண்மை, பெண் குறித்த பிம்பங்களை உடைத்துப் போடுவதில் கலகக் குரலாகத் தெரிகிறார். அவரை ரசிக்க முடிகிறது. ஹர்ணமின் ஒளிப்படங்கள் புகழ்பெற்ற கேலரிகளில் இடம்பிடித்துள்ளன. அவரை இங்கே பின் தொடரலாம் harnaamkaur.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.