ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமான இந்திய இராணுவம்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் உலக கலாச்சார விழா மேடை அமைப்புப் பணிகளுக்கு சம்பளத்துக்கு அமர்த்தப்பட்ட இராணுவ வீரர்கள்!

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உலக கலாச்சார விழா என்ற பெயரில் மார்ச் 11-ம் தேதி முதல் மூன்று நாட்கள் நிகழ்ச்சி ஒன்றை யமுனா நதிக்கரையில் நடத்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிஉட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் பொதுமக்கள் சுமார் 35 லட்சம் பேர் கலந்து கொள்ள இருப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியிருந்தனர்.

இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 120  வீரர்கள் யமுனா நதியின் மேல் பாலம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய ராணுவத்துக்கு இதற்காக ஸ்ரீ ஸ்ரீயின் வாழும் கலை அமைப்பு இதற்காக சம்பளம் தரும் என்று இராணுவ மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு லிவ் யமுனா என்னும் ‘யமுனா நதி பாதுகாப்பு இயக்கம்‘ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக 1000 ஏக்கருக்கு மேலான நிலத்தில் மேடைகள், சிறிய அறைகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் மிதக்கும் பாலம்போன்றவை தயார் செய்யப்பட்டு வருவதாகவும், நதி நீரைதூய்மை செய்வதற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் அழிக்கப்பட்டுள்ளன; இது யமுனா நதி பகுதியின் சூழலியலில் கடும்பாதிப்பை ஏற்படுத்தும் என்றுஎதிர்ப்பு தெரிவித்து போராட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போவதில்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மாணவர்கள் போராட்டம் நடத்துவதால் மக்களின் வரிப்பணம் வீணாய் போகிறது பலர் கவலைப்பட்டனர். ஆனால், நாட்டின் பாதுகாப்புக்கும், இயற்கை பேரிடர் நேரங்களில் மக்களைக் காக்கவும் பணிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் என்ற சாமியாருக்காக வேலைப்பார்ப்பது குறித்து கேள்வி எழுப்பவில்லை. இந்தியாவின் இராணுவ வீரர்களா? அல்லது இந்துராஷ்ட்டிரத்தின் இராணுவ வீரர்களா என சந்தேகம் எழுப்புகின்றனர் நடுநிலையாளர்கள்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், கடந்த மக்களவைத் தேர்தலில் மோடிக்காக பிரச்சாரம் செய்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.